முக்கியத்துவம் பெரும் பாரதம்

கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் உலகமே ஸ்தம்பித்து இருந்தபோது நம் பாரதம், உலக அளவில் பெருமளவு முதலீட்டை ஈர்த்த நாடாக இருந்துள்ளது தொழில் நிறுவனங்களுக்கு அதிக சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. சுயசார்பு பாரதத்தை இதை தொழில்துறையினர் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இதனால் இளைஞர்களுக்கு பெருமளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆராய்ச்சிகளுக்கு பெருமளவு முதலீடு செய்யப்பட வேண்டும். ‘ஏன் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும்’ எனும் நிலை மாறி தற்போது ‘இந்தியாவில் முதலீடு செய்யலாம்’ எனும் நிலைக்கு நாம் முன்னேறியுள்ளோம் என பிரதமர் மோடி அஸோசெம் எனப்படும் தொழில் கூட்டமைப்பின் மாநாட்டில் உரையாற்றினார். இதில், அஸோஸெம்மின் செஞ்சுரி விருது டாடா குழும நிர்வாகி ரத்தன் டாடாவுக்கு வழங்கப்பட்டது.