மீண்டும்! லோக்சபாவில், ‘முத்தலாக்’ மசோதா நிறைவேற்றம்

முஸ்லிம் சமூகத்தில், மூன்று முறை, ‘தலாக்’ கூறி விவாகரத்து பெறும் முறையை குற்றமாக்கும், முத்தலாக் சட்ட மசோதா, லோக்சபாவில் நிறைவேறியது. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, வெளிநடப்பு செய்த நிலையில், ஓட்டெடுப்பில், இந்த மசோதா நிறைவேறியது.

முஸ்லிம்களில், மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து பெறும் முறையை எதிர்த்து, முஸ்லிம் பெண்கள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன. அதில், ‘முத்தலாக் முறை சட்டவிரோதம்’ என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

‘முத்தலாக் முறை செல்லாது’ என, 2017 ஆகஸ்டில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ஆனாலும், இந்த முறை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இதையடுத்து, அவசர சட்டத்தை கொண்டு வந்தோம். கடந்த, 2017 ஜனவரியில் இருந்து, இதுவரையிலும், 574 சம்பவங்கள் நடந்துள்ளதாக ஊடங்களில் செய்தி வெளியாகி உள்ளது. முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு சட்டத்துக்கான இந்த மசோதாவின்படி, முத்தலாக் கூறி விவாகரத்து பெறுவது சட்டவிரோதம்; அது செல்லாது. அவ்வாறு விவாகரத்து பெறும் கணவனுக்கு, 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும். இந்த சட்டம், முஸ்லிம் பெண்களை பாதுகாக்கவே கொண்டு வரப்பட்டுள்ளது; முஸ்லிம் ஆண்களுக்கு எதிரானதல்ல என்று மத்திய சட்ட அமைச்சர், ரவிசங்கர் பிரசாத் கூறினார்.