சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய மேற்கூரையில் 600 கி.வா. சோலார் கருவி நிறுவி 2,000 யூனிட் மின் உற்பத்தி

தமிழகத்தின் முக்கிய ரயில் போக்குவரத்து முனையமாக இருந்துவரும் சென்னை சென்ட் ரல் ரயில் நிலையத்தில் பல்வேறு பசுமை திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகின்றன. குடிநீர் மறு சுழற்சி, சோலார் மின்உற்பத்தி, கழிவுநீர் மேம்பாட்டு மையம், மழைநீர் சேமிப்பு, பயணிகளுக்கான ஓய்வு அறைகள், உணவகங்கள், வை-பை வசதி, எல்இடி விளக்கு கள் உள்ளிட்ட வசதிகளை மேம் படுத்துவதில் தெற்கு ரயில்வே கவனம் செலுத்தி வருகிறது.

அந்த வகையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலை யத்தின் மேற்கூரையில் தனியார் நிறுவனத்தின் பங்களிப்போடு சுமார் ரூ.5 கோடி செலவில் மொத் தம் 600 கிலோ வாட் அளவுக்கு சோலார் கருவிகள் நிறுவப்பட் டுள்ளன.

இதன்மூலம் தினமும் கிடைக் கும் 2,000 யூனிட் மின்சாரம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பகல் நேர மின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய உதவுகிறது. வெளிச்சந்தை யில் யூனிட்டுக்கு ரூ.8 என்றால், இங்கு நாங்கள் ஒரு யூனிட் மின் சாரத்தை ரூ.3.24-க்கு பெறுகிறோம். இதனால், மின்கட்டண செலவு 60 சதவீதம் வரை குறைவதோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடிகிறது.