மவுஸும் தேங்காய் பறிக்கும்

உலகின் பெரும் தேங்காய் உற்பத்தி தேசங்களுல் ஒன்று பாரதம். ஆனால் மரம் ஏற தேவையான வேலையாட்கள் பற்றாகுறையும் இங்கு நிலவுகிறது. உதாரணமாக கேரளாவில் 18 கோடி தென்னை மரங்கள் உள்ளன அதற்கு குறைந்தபட்சமாக 50000 பணியாட்களாவது தேவை எனும் நிலையில் 7000 பேர் மட்டுமே தற்போது உள்ளனர். இதை நிவர்த்தி செய்ய சென்னையை சேர்ந்த மேக்ரோ ரோபோட்டிக்ஸ் எனும் ஸ்டார்ட்-அப் நிறுவனம் தென்னை மரம் ஏறி தேங்காய் பறிக்கும் ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளது.

‘அமரன்’ எனப்பெயரிடப்பட்டிருக்கும் இந்த ரோபோ கீழே இருப்பவர் தன் மவுஸ் கிளிக்கில் தேர்ந்தெடுக்கும் தேங்காயை தன் ஆறு கைகள் மூலம் பறித்திடும். தற்போது வெள்ளோட்டம் பார்க்கப்படும் இந்த ரோபோவுக்கு அமெரிக்க காப்புரிமை பெறப்பட்டுள்ளது. விரைவில் விற்பனைக்கு வரவுள்ள இந்த ரோபோவின் விலை ஐந்து லட்சத்திற்கு அதிகம் தான் என்றாலும் இதனை வாடகை விடுவதன் மூலமும் சுயதொழில் செய்து சம்பாதிக்க முடியும்.