மருதுார் அணையில் கல்வெட்டு கண்டுபிடிப்பு

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை தொல்லியல் துறை மாணவர்கள், 24 பேர், துறைத்தலைவர் சுதாகர், பேராசிரியர்கள் மதிவாணன், முருகன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராஜ் ஆகியோருடன் தொல்லியல் சின்னங்களை பார்வையிட சென்றனர்.

தாமிரபரணி ஆற்றின் குறுக்கேவுள்ள மருதுார் தடுப்பணையில் மாணவர்கள் ஆய்வு செய்ததில், 716 ஆண்டுகளுக்கு முந்தைய, குலசேகரபாண்டிய மன்னன் காலத்திய கல்வெட்டை கண்டறிந்தனர். அந்த கல்வெட்டில், மண்டபம் நிறுவப்பட்டதற்கான குறிப்பு உள்ளது. 1500ல் இந்த அணையை கட்டும்போது பழைய மண்டப கற்களை பயன்படுத்தியிருக்கலாம். அதில் ஒன்று தான், கல்வெட்டு இடம்பெற்றுள்ள இந்த கல்வெட்டு என, மாணவர்கள் தெரிவித்தனர். கல்வெட்டை கண்டுபிடித்த மாணவர் ராகுல்கிருஷ்ணாவை பேராசிரியர்கள் பாராட்டினர்.