மம்தாவின் இரட்டை வேடம் அம்பலம் – குடியுரிமை சட்டம் 2005ல் ஆதரிப்பும் 2019ல் எதிர்ப்பும்

குடியுரிமை சட்டத்துக்கு 2005ல் ஆதரவு தந்த, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 2019ல் அச்சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தப்போவது இல்லை என எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

பாக்., வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து, இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ள ஹிந்து, சீக்கியர் உள்ளிட்டோருக்கு குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமை சட்டத்தில் சமீபத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இவரே கடந்த 2005ம் ஆண்டு, லோக்சபாவில் வங்கதேசத்தினரின் ஊடுருவலை எதிர்த்து, சபையில் காகிதங்களை வீசி எறிந்து, குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார். அச்சமயம் மேற்குவங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் புத்ததேவ் பட்டாச்சார்யா ஆட்சியிலிருந்தார். கம்யூ., ஆட்சியை எதிர்க்க, மம்தாவுக்கு அப்போது இந்த முகமூடி தேவைப்பட்டது. தற்பொழுது பாஜகவின் ஆட்சி ஓங்குவதால், வங்கதேசத்தினரின் ஓட்டு வங்கிக்காகவும், தன்னுடைய ஆட்சியை தக்கவைத்து கொள்வதற்காகவும் சுயநலத்துடன் குடியரிமை சட்டத்தை எதிர்க்கிறார்.

2005ல் கூறியது என்ன?

கடந்த 2005ல் (4-8-2005) லோக்சபாவில் மம்தா, மேற்குவங்கத்தில், வங்கதேசத்தினரின் ஊடுருவல் அதிகமாக உள்ளது. இது பேரழிவுக்கு வழிவகுக்கிறது. தேர்தலில் வங்கதேசத்திலிருந்த ஊடுருவியவர்களும் ஓட்டு போட்டனர். இது மிகவும் பயங்கரமான விவகாரம். என்னிடம் வங்கதேசத்திலிருந்து ஊடுருவியவர்களின் பட்டியலும், இந்திய வாக்காளர்கள் பட்டியல் இரண்டுமே உள்ளது. இதுகுறித்து சபையில் எப்போது விவாதிக்க உள்ளீர்கள்? என கேள்வி எழுப்பிய மம்தா, குடியுரிமை மசோதாவை ஆதரித்தார்.

அந்தர் பல்டி:

ஆனால் அவரே தற்போது குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ‘என் ஆட்சியை வேண்டுமானாலும் கலைக்கட்டும். குடியுரிமை சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த அனுமதிக்க மாட்டேன். என் பிணத்தின் மேல் தான் அச்சட்டத்தை அமல்படுத்த முடியும்’ என மம்தா தற்போது கூறியுள்ளது, அரசியல் லாபத்திற்கே என்பது தெளிவாகிறது. இது தொடர்பான வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.