மமதா தர்பாரில் ஜிகாதிகள் கொட்டம்

கிழக்கே ஒரு கிரகணம்

பிரிட்டிஷ்காரர்கள் எவ்வாறு கிழக்கு வங்காளத்தை தாருல் இஸ்லாமாக மாற்ற ஆர்வமும் வெறியும் முஸ்லிம்களிடம் ஏற்பட திட்டமிட்டார்களோ, அதே போல் மம்தாவும் மேற்கு வங்க மாநிலத்தை தாருல் இஸ்லாமாக மாற்றும் முஸ்லிம்களின் முயற்சிக்கு உறுதுணையாக இருக்கிறார். நாடாளுமன்றத்தில், ௨௦௦௫ல் ‘பங்களா தேஷ் அகதிகள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இது மிகவும் முக்கிய மான விஷயம். இதை எப்போது விவாதிக்கப் போகிறீர்கள்? எனக் கூறி கையிலிருந்த காகிதங்களை கிழித்து எறிந்து ஆவேசப்பட்ட மமதா இன்று ஊடுருவிய முஸ்லிம்களுக்காக வக்காலத்து வாங்கி வன்முறை தூபம் போடுகிறார். இது வாக்கு வங்கி அரசியல் அல்லாமல் வேறு ஒன்றுமில்லை.
மம்தா பானர்ஜி ஊடுருவிய முஸ்லிம் களுக்கு மட்டுமே வக்கா லத்து வாங்கி வருகிறார். முந்தைய கம்யூனிஸ்ட் அரசாங் கம், ஊடுருவிய முஸ்லிம் களை கணக்கெடுக்கவில்லை. ஹிந்துக்களை மட்டும் கணக்கெடுத்து திருப்பி அனுப்பிய சம்பவங்களும் உண்டு. 1977 முதல் 1991 வரை 64,125 ஹிந்து அகதிகள் வந்ததாகவும், இதே கால கட்டத்தில் 1,51,175 முஸ்லிம்கள் ஊடுருவியதாகவும் எல்லைப் பாதுகாப்பு படையினர் தெரிவித்தார்கள்.
இதே சமயத்தில் முறையான விசா பெற்று இந்தியாவிற்கு வந்த பங்களா தேஷ் நாட்டினரின் எண்ணிக்கை 5,88,491. இவர்கள் விசா காலம் முடிந்த பின்னரும் தங்களின் தாய் நாட்டிற்கு திரும்பவில்லை. ஊடுருவிய முஸ்லிம்களின் துணையோடு, மேற்கு வங்க மாநிலத்திலேயே தங்கி விட்டார்கள். இவர்களை வெளியேற்ற ஏன் உரிய நடவடிககை எடுக்கவில்லை? இவ்வாறு ஊடுருவியவர்களும், முறையான விசா பெற்று வந்த பங்களா தேஷ் நாட்டினரும் குவிந்தது. மேற்கு வங்கத்தின் எல்லைப்புற மாவட்டங்களில். 1983-ல் மத்திய அரசுக்கு, ஒரு தொண்டு நிறுவனம் அனுப்பிய கடிதத்தில், பங்களா தேஷ் நாட்டின் எல்லையில் அமைந்துள்ள கரீம்பூர், சப்ரா மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்காணவர்கள் மேற்கு வங்கத்தில் ஊடுருவியுள்ளார்கள் என ஆதாபூர்வமாக சில சம்பவங்களை சுட்டிக் காட்டி எழுதியுள்ளது.