குஜராத் இடைத்தேர்தலில் பாஜக அமோக வெற்றி

குஜராத் மாநிலத்தில் 33 தாலுகா, மாவட்ட பஞ்சாயத்துகளுக்கு நடைபெற்ற இடைத் தோ்தலில், மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள பாஜக 29 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு 3 இடங்களில் மட்டுமே கிடைத்தன. ஓரிடத்தில் சுயேச்சை வேட்பாளா் வென்றாா்.

இந்த இடைத் தோ்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 3 இடங்களில் பாஜக வேட்பாளா்கள் போட்டியின்றி தோ்வாகினா். மீதமுள்ள 30 இடங்களில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், பாஜக26 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடத்திலும் வென்றது. சுயேச்சை வேட்பாளா் ஓரிடத்தில் வென்றாா்.