மக்களை தவறாக வழிநடத்தும் எதிர்க்கட்சிகள் – அமித் ஷா

 குடியுரிமை சட்டம் குறித்த விவகாரத்தில், நாட்டு மக்களை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

குடியுரிமை சட்ட விவகாரத்தில், அனைத்து எதிர்க்கட்சிகளும், மக்களை தவறாக வழிநடத்துகின்றன. எந்த சிறுபான்மையினரின் குடியுரிமையும் பறிப்பு என்ற கேள்விக்கே இடமில்லை. இதற்கான அம்சமும், சட்டத்தில் இல்லை. குடியுரிமை சட்டம், முன்னாள் பிரதமர் நேரு காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதி என்பதை காங்கிரசுக்கு சொல்லி கொள்கிறேன். ஆனால், அதனை 70 ஆண்டுகளாக, வாக்குவங்கி காரணமாக, காங்கிரஸ் அமல்படுத்தவில்லை. ஆனால், இந்த சட்டத்தை பா.ஜ., அரசு அமல்படுத்தி, கோடிக்கணக்கானோருக்கு குடியுரிமை வழங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.