மகான்களின் வாழ்வில் இது ஆன்மநேய ஒருமைப்பாடு

பேலூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் சுவாமி விவேகானந்தர் தங்கிய அறைக்குப் பக்கத்து அறையில் சுவாமி விஞ்ஞானானந்தர் தங்கியிருந்தார்.

ஒருநாள் நடுஇரவு திடீரென்று அவருக்குத் தூக்கம் கலைந்தது. அறையை விட்டு வெளியே வந்தார். அப்போது வராந்தாவில் சுவாமி விவேகானந்தர் நிம்மதியிழந்த நிலையில் உலவிக் கொண்டிருந் ததைக் கண்ட சுவாமி விஞ்ஞானந்தர், சுவாமிஜி, உங்களுக்குத் தூக்கம் வரவில்லையா?’ என்று கேட்டார்.vinganandar

அதற்கு சுவாமிஜி, நான் தூங்கிக் கொண்டிருந்தேன். ஆனால் திடீரென்று எனக்கு ஓர் அதிர்ச்சி ஏற்பட்டது. இப்போது எங்கோ ஏதோ ஒரு பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. அதனால் பலர் துன்பத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்” என்றார்.

சுவாமிஜி கூறியதை விஞ்ஞானானந்தர் முதலில் முக்கியமாகக் கருதவில்லை. தூங்கிக் கொண்டிருந்த ஒருவருக்கு உலகில் எங்கோ ஒரு மூலையில் நடந்த விபத்து பற்றிய உணர்வு ஏற்படுவதாவது என்று நினைத்தார்.

ஆனால் மறுநாள் காலை நாளிதழில் அவர் படித்த விஷயம் அவருக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்தது.

ஆம். சுவாமிஜி இரவு விபத்தை உணர்ந்த அதே நேரத்தில், பிஜித் தீவின் அருகில் பூகம்பத்தால் பலர் இறந்ததாகச் செய்தி வந்திருந்தது.

இந்நிகழ்ச்சியைப் பார்க்கும்போது சுவாமி விவேகானந்தரின் மனிதாபிமானம், மதம், மொழி, நாடு ஆகிய எல்லாவற்றையும் கடந்தது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில்

அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்