‘அமைதிப் பூங்கா’ தமிழகம் இன்று திடீரென ஜிகாதி காப்பகமாகி விட்டதா என்ன?

சில மாதங்களுக்கு முன் கேரளத்தில் மூன்று பெண்கள் உள்ளிட்ட 21 பேர் காணவில்லை என கேரள அரசுக்கு ஒரு புகார் மனு வந்தது.  இதன் அடிப்படையில் காணாமல் போன 21 பேர்களும் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸில் சேர்ந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மத்திய புலனாவு பிரிவினர் (என்.ஐ.ஏ) தங்களது விசாரணையை துவக்கினார்கள்.  இதன் காரணமாக மும்பையில் ஒரு மத போதகர் உட்பட இருவரை கைது செது விசாரணையும்  நடத்தப்பட்டது.  இந்த விசாரணையின் அடிப்படையில் கடந்த இரண்டாம் தேதி என்.ஐ.ஏ அதிகாரிகள் கேரள, டெல்லி, தெலுங்கானா காவல்துறை அதிகாரிகளுடன் நடத்திய தேடுதல் வேட்டையில் கேரளத்தில் ஆறு பேர் கைது செயப்பட்டார்கள்.

பிடிபட்டவர்களில் ஒருவர்   கோவை உக்கடம் பகுதி ஜி.எம். நகரைச் சார்ந்த அபுபஷீர். இதன் அடிப்படையில் என்.ஐ.ஏ தமிழகத்தில் கோவை, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்திய போது மேலும் பலர் பெயர் அடிபட்டது. இதன் காரணமாக தமிழகம் ஜிகாதிகளின் புகலிடமா என்ற கேள்வி எதிரொலிக்கிறது.jihadhi

கைது செயப்பட்ட அபுபஷீர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கோவையில் மூன்று பேரை என்.ஐ.ஏ விசாரணை வளைத்துக்குள் கொண்டு வந்துள்ளது. மூன்று பேர்களில் ஒருவன் உக்கடம் ஷாநவாஸ்கான். சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் இவர்கள் சில நாட்கள் தங்கிவிட்டுச் சென்றார்களாம். இவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில்  நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சார்ந்த சுபஹானி என்பவனையும் கைது செது விசாரணை நடத்தி வருகிறார்கள்.  இதே கடையநல்லூரில் உள்ள பிரபல ஓட்டல் உரிமையாளர் வீட்டிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளார்கள்.  இதில் வேடிக்கை என்ன வென்றால் தமிழக காவல் துறையினருக்கு தெரியாமலே என்.ஐ.ஏ அதிகாரிகள் உக்கடம் பகுதியில் விசாரணையை நடத்தி, கைது செய வேண்டும் என்ற நிலை ஏற்பட்ட போது தான் கோவையில் உள்ள காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.

. அமைப்பில் தற்போது தான் இவர்கள் இருப்பதாக கூறுவதும், இதற்கு முன் தமிழகம் அமைதி பூங்காவாக இருந்ததாகவும் காவல் துறையினரும், ஆளும் கட்சியினரும் பசப்பி வருகிறார்கள்.

2014ம் வருடம் ஜூலை மாதம் கடலூர் பரங்கிப்பேட்டையில் வாழும் உஸ்மான் அலியின் மகன் பக்ரிதீ,  அவனது மனைவி, மூன்று குழந்தைகளுடன் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.  இவன் முதலில் சிங்கப்பூரில் வேலை செது வந்த போது, அங்குள்ள சிலரின் தொடர்பு காரணமாக தான் ஒரு இஸ்லாமிய நாட்டில் வாழவேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்து சண்டையிடுவதாகவும் தனது தந்தையுடன் தொலைபேசியில் பேசியதாகவும் விசாரணையின் போது தெரிவித்துள்ளான்.

பக்ருதீனின் நன்பன் குல் முகமது மரைக்கார் சிங்கப்பூரில் ஜிகாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக தெரிய வந்தததும்  சிங்கப்பூர் அரசு அவனை நாட்டை விட்டு விரட்டி விட்டது.  இதை போலவே பரங்கிப் பேட்டையை சார்ந்த அஸ்ரப் அலி என்பவனை ராஜஸ்தான் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியபோது, அவன்  ரகசிய குழு ஆள் என்பது தெரிய வந்தது.  இவனிடம் நடத்திய விசாரணையில், வேலைக்காக துபா, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் இருக்கும்  20க்கு மேற்பட்ட தமிழக இளைஞர்களை மூளைச் சலவை செது, சிரியாவில் நடக்கும் யுத்தத்தில் இணைத்துக் கொள்ள  ஒரு குழுவே செயல்படுகிறது என்ற தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

2014ம் வருடம் ஆகஸ்ட் மாதம் தொண்டியில் ஐ.எஸ்.ஐ.எஸ்.  அமைப்பின் சின்னத்தை பொறித்த டி.சர்ட் அணிந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தவர்களைப் பற்றி உளவுத் துறையினர் விசாரணை நடத்தியது பலருக்கு தெரிந்திருக்காது.   எலக்ட்ரானிக் மீடியாவில் வெளிவந்த இந்த புகைப்படத்துடன் ஒரு வாசகம் முன்னிலைப்படுத்தப்பட்டது. தொண்டியிலிருந்து புறப்பட்டுள்ள சூறாவளி.” இவ்வாறு டி.சர்ட் அணிந்தவர்கள் பற்றிய விசாரணையின் முடிவில்   அப்துல் ரகுமான், ரிஸ்வான் என்ற இருவர் கைது செயப்பட்டார்கள்.  ஆனால் கைது செயப்பட்டவர்கள் மீது முறையான நீதிமன்ற விசாரணை  நடத்தப்பட்டதா என்பது கூட தெரியவில்லை.  இந்த டி.சர்ட்கள்  திருப்பூரிலிருந்து வரவழைக்கப்பட்டதா? இது போல் பல கைதுகள் முறையான விசாரனையின்றி காவல் நிலையத்தில் நீண்ட உறக்கத்தில் உள்ளன.  இதை முறையாக விசாரித்திருந்தால்,  திருப்பூரில் பல ஆண்டுகாலமாக மளிகைக் கடை நடத்திவரும் ஐ.எஸ்.ஐ.ஸ். அமைப்பினருடன் தொடர்பிலிருந்கும் மேற்கு வங்கத்தைச் சார்ந்த முஸா என்பவனை கைது செதிருக்கலாம்.  ஆனால் அவன் மேற்கு வங்கத்தில் கைது செயப்பட்டான்.  தமிழக காவல் துறையினருக்கு எந்த விஷயமும் தெரியவில்லை.

இஸ்லாமிய ஜிகாதிகளுக்கு அரசு ஆதரவு

1967க்கு பின்னர் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த தி.மு.க. வினர், இஸ்லாமியர்களின் வாக்குகளை பெறுவதற்காகவே, பயங்கரவாதிகளுக்கு நேரடியாக ஆதரவு அளித்த சம்பவங்களும் தமிழகத்தில் நடைபெற்றுள்ளன.   தமிழகத்தில் இஸ்லாமிய ஜிகாதிகளின் ஆட்டம் 1997-ல் அதிக அளவில் நடைபெற்றது.  இதற்கு முக்கியமான காரணம் 1996-ல் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலின் போது, தி.மு.க. கொடுத்த வாக்குறுதியாகும்.   1981லிருந்து கோவையில் ஹிந்து இயக்கங்களின் பொறுப்பாளர்கள் கொல்லப்படுவதும், கடுமையாக தாக்கப்படுவதும்  நடந்து வந்தது.  1992-ல் அயோத்தி பிரச்சினையை அடுத்து கோவையில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்த போது,  அல் உம்மா இயக்கதினர் பலர் கைது செயப்பட்டார்கள்.  இவர்கள் கோவையில் குண்டு வைப்பதற்காகவே கேரளத்திலிருந்து திருடப்பட்ட கார் மூலமாக வெடி குண்டுகள் கொண்டு வந்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது.

கோவையில் உக்கடம் பகுதியில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டன.  சட்ட மன்ற தேர்தலின் போது, தி.மு.க. வெற்றி பெற்றால், உடனடியாக இந்த சோதனை சாவடிகள் அகற்றப்படும் என தி.மு.க. உறுப்பினரான மு.ராமநாதன், தண்டபாணி போன்றவர்கள் வாக்குறுதி கொடுத்தார்கள். தேர்தலின் போது, தி,மு.க. வெற்றி பெற்ற செதி வரும் போதே, இஸ்லாமியர்கள் வன்முறையின் மூலமாக சோதனை சாவடிகளை அடித்து நொறுக்கிய போதும் சில காவலர்கள் தாக்கப்பட்ட போதும், ஆட்சியாளர்களின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு பின்னர், கோவை இஸ்லாமிய ஜிகாதிகளின் சோர்க்கமாகவே மாறிவிட்டது.  இதன் காரணமாக 1996-ல் கோவை சிறையில் வெடி குண்டு தாக்கி ஜெயிலர் பூபாலன் கொல்லப் பட்ட சம்பவத்தில் கைது செயப்பட்ட குற்றவாளிகளுக்கும், 1993-ல் சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலக வெடிகுண்டு தாக்குதலில் கைது செயப்பட்ட 16 அல் உம்மா இயக்கத்தினருக்கும் உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டது.  ஆகவே தி.மு.க ஆட்சியாளர்களின் ஆதரவு கிடைத்த பின்னர் தான்  ஜிகாதிகள் வலுப்பெற்றார்கள்.

1998 பிப்ரவரி  14 அன்று கோவையில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் அத்வானி பேச இருந்தபோது, அவரை கொலை செவதற்கு வெடி குண்டுகள் வைக்கப்பட்டன.  இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடைபெறும் என ஜனவரியிலேயே  உளவுப் பிரிவினர் மாநில அரசுக்கு  தகவல் கொடுத்தார்கள்.  திட்டமிட்டபடி தாக்குதல் நடைபெறும் என தெரிந்தும், மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.  இதற்கு முன்னர் தஞ்சையில் 8.2.1998 அன்று சாலியமங்கலம் பகுதியில் முகமதியா மில்லிலிருந்து ஆயுதங்களும் வெடி குண்டுகளும் தயாரிக்கத் தேவையான மூலப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.   இந்த சம்பவம் நடைபெற்ற போது,  முதல்வராக இருந்த கருணாநிதி தஞ்சைக்கு அருகில் பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்தார்.   கோவையில் குண்டு வெடிப்பு நடந்த பகுதிக்கு அருகில் அல்-அமீன் காலனியில் காவல் துறையினர் நடத்திய சோதனையின் போது, ஒரு இஸ்லாமியர் வீட்டில் வைத்திருந்த வெடிகுண்டு வெடித்து நான்கு பேர்  கொல்லப்பட்டார்கள்.  உளவு அமைப்புகள் கொடுத்த தகவல்களை கூட அன்றைய தி.மு.க. அரசு கண்டு கொள்ளவில்லை.

1998 பிப்ரவரி மாதம் கோவையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பந்தமாக அன்றைய பிரதமர் குஜ்ரால், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. தான் முதன்மையான காரணம் என்று கூறிய கருத்தை ஆமோதித்த கருணாநிதி, அதற்குரிய நடவடிக்கை எடுக்க முன் வரவில்லை.  ‘ரா’வில் பணியாற்றிய உயர் அதிகாரி கே.பி. பத்மநாபன், தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், தமிழ் புலிகள் அமைப்பும், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.யும் இணைந்து நடத்திய தாக்குதல் என்று எழுதிய போதும், தமிழக அரசு நியமித்த கோகுலகிருஷ்ணன் விசாரணையில், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. தான் திட்டம் வகுத்துக் கொடுத்தது என்று கூறிய பின்னரும் தமிழகத்தில் ஆண்ட தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

தி.மு.க. ஆட்சியில் நடைபெற்றது போலவே, அ.இ.அ.தி.மு.க. ஆட்சியிலும்  ஜிகாதிகளின் வளர்ச்சி தடுக்கப்படவில்லை.  2011 நவம்பர் 27 அன்று  மதுரையில் அத்வானியை கொல்ல, அவர் நடத்திய யாத்திரையின் வழியில் வைக்கப்பட்ட பைப் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.   2013ல் பெங்களூரு பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் அருகில் நடந்த  வெடி குண்டு தாக்குதலின் முக்கிய குற்றவாளி திருநெல்வேலி மேலப்பாளையத்தை சார்ந்தவன். ஒரு இஸ்லாமிய இயக்கததை தடை செத பின்னர், வேறு பெயர்களில் ஒரு புதிய இயக்கத்தை துவக்குவது உள்பட எல்லாம் உளவு துறையினருக்கு நன்கு தெரிந்தும் கூட நடவடிக்கை எடுக்க காவல் துறையினர் தயக்கம் காட்டுவது, ஆளும் கட்சியினரின் தலையீடல்லாமல் வேறென்ன?

2013 ஆகஸ்ட் 4ல் மணியாச்சி டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்பு, இலங்கையிலிருந்து 35 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் படகின் மூலமாக தமிழக கடற்கரை பகுதியில் புகுந்துள்ளார்கள்.  இவ்வாறு புகுந்தவர்கள் ஆயுதங்கள், வெடிமருந்துகளுடன் ஊடுருவியுள்ளார்கள் என தெரிவித்தபோதும், தமிழக உளவுப் பிரிவினரும், தமிழக காவல் துறையினரும் முறையான விசாரணை நடத்தியதாக தெரியவில்லை.  ஆனால் 2014  மே மாதம் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவாளியான ஜாகீர் உசைன் சென்னையில் கைது செயப்பட்டான்.  கோவையில், பெங்களுர் பா.ஜ.க. அலுவலகத்தை தாக்கிய வழக்கில் கைது செயப்பட்ட ஹக்கீமுக்கு, ஜாகீர் உசைன் கொடுத்த பணி அது என்பது விசாரணையில் தெரிந்தும் கூட காவல் துறையினர் முழுமையான விசாரணையை நடத்த வில்லை.

தமிழகத்தில் அல்-உம்மா இயக்கத்தை துவக்கியவர்களில் ஒருவர் ஆர்.ஜவாஹிருல்லா. அல் உம்மா தடை செயப்பட்ட பின்னர் முளைத்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்  கழகத்தின் அரசியல் கட்சியாக மனித நேய மக்கள் கட்சி துவக்கப்பட்டது.  இதன் தலைவராக பொறுப்பு ஏற்ற ஜவாஹிருல்லா  1991ல் தடை செயப்பட்ட சிமி இயக்கத்தின் தமிழக தலைவராக பொறுப்பு வகித்தவர்.  இன்று இஸ்லாமிய அமைப்புகளில் உலா வருபவர்கள் முன்னாள் சிமி இயக்கத்தில் பொறுப்பு வகித்தவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.  தாருல் இஸ்லாம் பவுண்டேஷன் என்ற அமைப்பை ஏற்படுத்திய எம்.குலாம் முகமது,  மனித நீதிப் பாசறை என்ற அமைப்பை உருவாக்கினார்.  எஸ்.எம்.பகீர் என்வர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பை உருவாக்கியவர்.  இவர்கள் இருவரும் சிமி இயக்கத்தில் முக்கிய பொறுப்பு வகித்தவர்கள்.   ஜமாதே இஸ்லாம் ஹிந்த் என்ற அமைப்பின்  முதல் தலைவர் இபான் சவூத்.  இந்த அமைப்பு சிமி இயக்கத்தின் ஒரு பிரிவு.

ஆகவே பயங்கரவாத தாக்குதலை நடத்த சூத்திரதாரியாக விளங்கிய சிமி இயக்கத்திலிருந்து வந்தவர்கள் தான் பல இஸ்லாமிய அமைப்புகளை உருவாக்கியுள்ளார்கள்.  இவர்களின் கடந்த கால சம்பவங்கள் நன்கு தெரிந்தும் கூட இவர்களுடன் கூட்டணி வைக்கத் துடிக்கும் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க.வினரின் செயல்பாடுகளால் தமிழகம் இஸ்லாமிய ஜிகாதிகளின் சோர்க்கம் ஆகிவிட்டது.