ப.சியும்ஆணவக்கொலையும்- பகுதி 1

திருவாளர் ப சிதம்பரம் அளிக்கும் தொலைக்காட்சி நேர்காணல்களைக் கவனித்திருக்கிறீர்களா? ஒன்றிலாவது அவர் பேட்டி காணும் நிருபரின் கண்ணைப் பார்த்து பேசியிருக்கிறாரா? பாராளுமன்றத்தில் பேசும்போதும், பொதுக்கூட்டத்தில் பேசும்போதும், ஊடகவியலாளர் சந்திப்பின் போதாகட்டும் என்று எல்லா நிகழ்வுகளின் போதும் இதுதான் நாம் காணக்கிடைப்பது.

இன்னும் ஒரு அம்சத்தையும் நாம் கவனிக்கிலாம். இதழ் கோடியில் எப்பொழுதும் ஒரு ஏளன சிறுமுறுவல் இருக்கும்.

இவற்றையெல்லாம் புரிந்துகொள்ள நாம் ஒன்றும் மெய்மொழி வல்லுனராக (Body Language Expert)இருக்க வேண்டியதில்லை.

‘உங்களுகெல்லாம் என்ன தெரியும்? என்னுடைய மேதமைக்கு நீங்கள் எல்லாம் பக்கத்தில் நெருங்க முடியுமா ‘ என்ற அவருடைய நினைப்பு முகத்தில் தெளிவாக எழுதி ஒட்டாத குறையாகத் தெரிகிறது. இதனை பேட்டியில் பலமுறை அவரே சொல்லியிருக்கிறார். ஏதாவது உங்களுக்கு ஐயம் இருந்தால் தந்திடிவிக்கு அளித்த பேட்டிகளை கவனியுங்கள் – குறிப்பாக கீழ்க்கண்ட மூன்று நேர்காணல்கள் :

  • பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது (டிசெம்பர் 2016)
  • 2019 பொதுதேர்தலுக்கு முன் – பிரச்சார வேளையில்
  • சென்றவாரம் மத்திய அரசு பட்ஜெட் குறித்த பேட்டி

இவற்றில் எல்லாம் அவரே பலமுறை ‘ உங்களுக்கெல்லாம் புரிந்துகொள்ள முடியாது ‘ என்று சொல்லக் காணலாம். (மூன்று பேட்டிகளையும் எடுத்தவர் ஒரே நிருபர்தான் – இந்த ஆசாமியும் லேசுப்பட்டவர் இல்லை – மற்றவர்கள் எல்லோரிடமும் வீராவேசமாகப் பேசுவார் – இருக்கையில் குதித்து குதித்து, இவரே பேசிக் கொண்டிருப்பார். தமிழ்நாட்டு அர்னாப் கோஸ்வாமி என்று இவருக்கு நினைப்பு. பசி என்றால் மட்டும் பம்முவார்)

நண்பர்களே, இவருடைய  இந்த போக்கு இன்றுதான் என்று இல்லை. 1993-94 காலத்தில் சென்னையில் விஜில் என்ற அமைப்பில் ஒரு விவாதம் நடத்தப்பட்டது. பொருள்: உலகவர்த்தக அமைப்பு(WTO) மற்றும் காட்(GATT) ஒப்பந்தம். ஆதரித்து பேசியவர் கணேசன், மத்திய அரசு நிதித்துறை செயலர். எதிர்த்து பேசியவர் ஆடிட்டர் குருமூர்த்தி. அந்த கூட்டத்தின் இறுதியில் கணேசன் ” குருமூர்த்தி பேசுவது பொருளாதாரம் என்றால் நான் என்னை தேர்ந்த பரத நாட்டியக் கலைஞர் என்று சொல்லிக் கொள்ளலாம் ” என்று கிண்டலாகச் சொன்னார். அதனை திருவாளர் பசி கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். இந்த ‘ நாட்டிய ஒப்புமை ‘ பேச்சை தன்னுடைய கருத்தாக பலமுறை சொல்லியும் எழுதவும் கண்டிருக்கிறேன்.

ஆணவம் சரி, கொலை எங்கிருந்து வருகிறது என்கிறீர்களா? அடுத்த பகுதியில் பார்க்கலாம்.