சொட்டு தண்ணீர்கூட தமிழகத்துக்கு கிடைக்காத நிலை உருவாகியுள்ளது – பாலாற்றின் குறுக்கே 40 அடியாக உயர்த்தப்படும் தடுப்பணை

ஆந்திர மாநிலம் பாலாற்றின் குறுக்கே 22 அடியாக உள்ள தடுப்பணைகளை 40 அடியாக உயர்த்திக் கட்டும் பணிகளில் ஆந்திர அதிகாரிகள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்துள் ளனர்.

தமிழகத்தின் முக்கிய நதிகளில் ஒன்றான பாலாறு மூலம் வடமாவட்டங் களில் 4.25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றுவந்தன. இந்நிலையில், ஆந்திர அரசு கடந்த 2006-ம் ஆண்டு சித்தூர் மாவட்டம் குப்பம் அடுத்த கணேசபுரம் பகுதி யில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப் பணையை கட்ட முயன்றது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

ஆந்திர அரசை கண்டித்து தமிழக அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், பாலாறு பாதுகாப்பு சங்கங்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட் டன. இதனால், பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் பணியை ஆந்திர அரசு தற்காலிகமாக நிறுத்தியது.

அதன்பிறகு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கை துரிதப்படுத்தாததால், கடந்த 2016-ம் ஆண்டு ஆந்திர அரசு பல்வேறு இடங்களில் பாலாற்றின் குறுக்கே 5 அடி உயர தடுப்பணைகளை மீண்டும் கட்டத் தொடங்கியது. தமிழக – ஆந்திர எல்லைப்பகுதியான வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புல்லூர் கனகநாச்சியம்மன் கோயில் அருகே 5 அடி உயரமாக இருந்த தடுப்பணையை 12 அடியாக உயர்த்திக் கட்டியது.

முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியில், பாலாற்றின் குறுக்கே 22 இடங்களில் கட்டப்பட்ட அனைத்து தடுப்பணைகளையும் 12 அடியாகவும், அதன் பிறகு 22 அடியாகவும் உயர்த்தி கட்டியது.இதற்கு, தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், 22 தடுப்பணைகளை யும் தற்போது 40 அடியாக உயர்த்தி கட்ட அம்மாநில அரசு ரூ.43 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. 22 தடுப்பணைகளையும் 40 அடியாக உயர்த்திக் கட்ட ஆந்திர அரசு முடிவெடுத்து, அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து பணி ஆணைகளை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பெருமழை பெய்தாலும் இனி ஒரு சொட்டு தண்ணீர்கூட தமிழகத்துக்கு கிடைக்காத நிலை உருவாகியுள்ளதாக தமிழக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே 22 தடுப்பணைகளை கட்டியுள்ள நிலையில், தமிழக அரசு 2 தடுப்பணைகள் குறித்து மட்டுமே உச்ச நீதிமன்றத்தில் பேசி வருகிறது. எனவே, இந்த முறை 22 தடுப்பணை பணிகளையும் தடுத்து நிறுத்த உரிய ஆதாரங்களுடன் வாதத்தை முன்வைக்க வேண்டும். வழக்கை துரிதப்படுத்த தமிழக அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும். இரு மாநில முதல்வர்களும் கலந்து பேசி பாலாறு பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.

அதேநேரத்தில் பாலாறு விவகாரத் தில் ‘நதி நீர் ஆணையம்’ அமைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். இல்லையென் றால், தமிழக பாலாற்றில் இனி எப்போ தும் தண்ணீரை நாம் பார்க்க முடியாது. பாலாற்றில் தண்ணீர் வரத்து இல்லை யென்றால், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதுடன், விவசாய பாசனமும் பாதிக்கப்படும். இதை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”