பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்… மகான்களின் வாழ்வில்

மகான் ஸ்ரீராகவேந்திரர், கோயிலில் அமர்ந்து ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருந்தார். அவ்வேளையில், கோயிலுக்கு வெளியே நின்று இருவிழிகள் அவரையே கண்கொட்டாமல் பார்த்தன.

‘உள்ளே வா’ என்று, தன்னைப் பார்த்தவனை அவர் அழைத்தார்.

இல்லை, சுவாமி. நான் தாழ்ந்தகுடியில் பிறந்தவன். எனக்குக் கோயிலில் நுழைய அனுமதி கிடையாது!” என்று தயங்கினான் அவன். ragavenஉயிரில், உயர்வு – தாழ்வு என்ற வித்தியாசம் கிடையாது. உன்னைப் படைத்த கடவுளின் சந்நிதிக்கு நீ வரக்கூடாது என்று எப்படித் தடுக்கலாம்? நீ தாராளமாக வரலாம்!” என்று உள்ளே கூப்பிட்டார். அவர் பாதங்களில் விழுந்த அவனை நிமிர்த்தித் தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டார். அவன் உடல் சிலிர்த்தான்.

மூலராமரின் பூஜைக்கு உன்னால் முடிந்ததைக் கொண்டு வந்து தா!” என்று அவனுக்கு ஆசிகள் அளித்து அனுப்பினார்.

ஏழையாகப் பிறந்திருந்த அவன், வேறு எதுவும் கிடைக்காமல் தன் வீட்டில் இருந்த கடுகைக் கொண்டு போய் அவரிடம் காணிக்கையாகக் கொடுத்தான்.

ஸ்ரீராகவேந்திரர், தன் சீடர்களை அழைத்தார். அதை அன்றைய உணவில் சேர்க்கச் சொன்னார்.

குருவே, இந்த விரத மாதத்தில் கடுகை உணவில் சேர்க்க மாட்டோமே?” என்று சீடர்கள் தயங்கினர்.

உண்மையான பக்தியுடன் சமர்ப்பிக்கப்படும் எந்தப் பொருளையும் இறைவன் மறுக்க மாட்டான்!” என்றார் மகான்.

மகான் ராகவேந்திரரால் அணைத்து ஏற்றுக்கொள்ளப்பட்ட அந்த பக்தன் அவர் பாதங்களில் விழுந்து பணிந்து மகிழ்ந்தான்.

எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில்

அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்