துன்பம் கண்டார் துடைத்தெறிந்தார்!

ஒரு உயிரைக் காப்பாற்ற தன் ஆட்டோவையே அடகு வைத்தார்

துன்பம் கண்டார் துடைத்தெறிந்தார்!

ஆட்டோ ஓட்டுனர் ரவிச்சந்திரன் வாகனத்தில் மேற்கு வங்காளக்காரர் ஷங்கர் தாஸ், சென்னைக்கு ஒரு வேலையாக வந்து, போக்கொண்டிருக்கும்போது மாரடைப்பு வந்துவிடுகிறது. ரவிச்சந்திரனுக்கு அரைகுறையாக ஹிந்தி தெரிந்திருந்ததால் புரிந்துகொண்டு நேராக வைத்தியரிடம் கூட்டி சென்றார். ஈ.சி.ஜி. தாறுமாறாக இருக்கவே, உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க சோல்கிறார்கள். ராயப்பேட்டை மருத்துவமனையில் இங்கு மாரடைப்பு சிகிச்சைக்கான வசதி இல்லை என்று சோல்லவே, அங்கிருந்து அரசு பொது மருத்துவமனைக்கு செல்கிறார். அவர்களும் பொறுப்பாக கவனித்து மாரடைப்பு என்பதால் செகிறார்கள். மகனுக்கு தகவல் போனது. வந்தான். மாணவன். என்னிடம் பணம் இல்லையே என்று அழத் துவங்கிவிட்டான்.

வெளி மாநிலக்காரர் என்பதால் இருதய அறுவை சிகிச்சை செது பேஸ்மேக்கர் 1.5 லட்சம் கட்டவேண்டும் என்கிறார்கள். ஆட்டோ ஓட்டுனர் ரவிச்சந்திரனிடம் மருத்துவமனை டீன், தலைமை மருத்துவர்களிடம் குறைக்க சோல்லி பேசுகிறார். நம்ம ஊருக்கு வந்தவர். வெளி மாநிலக்காரர். வந்த இடத்தில் இப்படி ஆகிவிட்டது. இவரை auto-healpதமிழகத்துக்கு சென்றார், இறந்துவிட்டார் என்று யாரும் சோல்லக்கூடாது. இவரை குணப்படுத்த ஆட்டோக்கரரும், அரசு மருத்துவமனை மருத்துவர்களும் ‘போராடினார்கள், காப்பாற்றினார்கள்’ என்று சோல்லவேண்டும். யார் வந்தாலும் அனாதையாக விடமாட்டோம் தமிழர்கள் என்று உலகுக்கு தெரியவேண்டும் என்று சோல்லியிருக்கிறார். பற்றிக்கொண்டது சேவை நெருப்பு அனைவர் மனதிலும்.

உடனே, மருத்துவர்கள் பேஸ்மேக்கர் நிறுவனத்தை தொடர்பு கொண்டு 1.5 லட்சத்தை, 68 ஆயிரமாக அதைக்கூட திரட்ட முடியவில்லை. ரவிச்சந்திரன் தன்னுடைய முஸ்லிம் நண்பரை தொடர்பு கொண்டார். அவர் 15 ஆயிரம் தந்தார். ரவிச்சந்திரன் தன் பங்குக்கு ஆட்டோவை அடகு வைத்தார். 30 ஆயிரம் சேர்ந்தது. மிச்சத்தை டீன் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி, கைக்காசை போட்டு சரிக்கட்டி பணத்தை திரட்டி, கட்டி, சிகிச்சையும் முடித்தார்கள். வெற்றி. ஷங்கர் தாஸ் பிழைத்துக்கொண்டார்.

ஒரு குடும்பம் காப்பாற்றப்பட்டது. ஐ.சி.யூவுக்கு வந்தார் ஷங்கர். பணம் திரட்ட மகன் சென்றார். இங்கு இவரை பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதால் காலை முதல் மாலை வரை மருத்துவமனையில் வாசம். இரவு முதல் காலை வரை சவாரி என்று 22 நாட்கள் சமாளித்துள்ளார். உறவினர்கள் வந்தார்கள். பணம் வந்தது. ஆனால் குறைவாக. இன்னும் 10 ஆயிரம் இருந்தால் ஆட்டோவை மீட்டுவிடுவேன் என்ற நிலை. இல்லையேல் வட்டி ஏறும். அப்போதுதான் நம் கண்ணில் இந்த செதி பட்டது. இவரை தொடர்பு கொண்டு பேசி, சந்தித்து விவரம் கேட்டேன். சோன்னார்.

உடனடியாக, பாஜக துணை தலைவர் திருமதி வானதி ஸ்ரீனிவாசனை தொடர்பு கொண்டேன். நிச்சயம் ஏற்பாடு செகிறேன் வாருங்கள் என்றார். சோன்னது போலவே, தன் சோந்த பணத்திலிருந்து 10,000க்கு காசோலை எழுதித் தந்தார்.

காலத்தி னாற்செத நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது

என்றார் நமது தாத்தா. சிறிய உதவியே பெரிது என்றால் ஒரு உயிரை காப்பாற்றிய பெரிய உதவி?     டூ

 

நல்ல காலம்

இருக்குது!

 

பொழிச்சலூர் ஆட்டோ டிரைவர் அருள், சங்கர் நகர் காவல் நிலையத்தில் தனது ஆட்டோவில் கிடந்த 8 சவரன் நகையை ஒப்படைத்தார். இந்த செய்தியை படித்து திருச்சியிலிருந்து அதன் உரிமையாளர் மணிக்கொடி ஆனந்தவேல் நேரில் வந்து பெற்றுச் சென்றார். அருளின் நேர்மையைப் பாராட்டி அவருக்கு ஆயிரம் ரூபாய் பரிசளித்தார்.

தினமலர், ஜனவரி 3, 2007

 

ஆட்டோ டிரைவர் வேல் முருகன் தன் ஆட்டோவில் கிடந்த ஒரு சூட்கேசில் 1.87 லட்சம் ரூபாய் ரொக்கம், பாஸ்போர்ட்கள், அன்னிய கரன்சிகள் ஆகியவற்றை காவல்துறை கன்ட்ரோல் ரூமில் ஒப்படைத்தார். இவற்றை தவறவிட்ட பிரேமராஜா பிறகு அவற்றைப் பெற்றுச் சென்றார். காவல் துறை ஆணையர் ராஜேந்திரன் வேல்முருகனின் நேர்மையைப் பாராட்டினார்.

நியூஸ் டுடே, ஜூலை 27, 2009

 

மந்தைவெளி ஆட்டோ டிரைவர் தனசேகரன் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில், தனது ஆட்டோவில் கிடந்த 5 சவரன் நகையையும் 50,000 ரூபாய் பெறுமானமுள்ள பட்டு சேலைகளையும் ஒப்படைத்தார். உரிமையாளர் ஜெயந்தி பிறகு காவல் நிலையத்திலிருந்து அதை பெற்றுச் சென்றார். உதவி கமிஷனர் ராமசுப்பிரமணியம் தனசேகரனுக்கு ஆயிரம் ரூபாய் பரிசளித்தார்.

– தினமலர், டிசம்பர் 12, 2006