பிரதமர் மோடி பிறந்தநாள் உரை

  குஜராத் சென்றுள்ள மோடி சுற்றுச்சூழல் பூங்காவை பார்வையிட்டு  இயற்கையை காப்பது நமது தலையாய கடமை என  கூறியுள்ளார்.  அங்கு செயல்படுத்தப்படும் வளர்ச்சித்  திட்டங்களையும் பார்த்தார் அங்கிருந்து சென்று பட்டாம்பூச்சி தோட்டத்துக்கு சென்று பட்டாம்பூச்சிகளை பறக்கவிட்டார். பின்னர் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு சென்றார். 133 ஆண்டுகள் பழமைவாய்ந்த சுதந்திரதேவி சிலையை தினமும் 10 ஆயிரம் பேர் மட்டுமே பார்க்கின்றனர் ஆனால் வெறும் 11 மாதங்களே ஆன பட்டேல் சிலையை தினமும் 8500 பேர் பார்வையிடுகின்றனர் என்று மோடி கூரினார்.  பிறகு சுற்றுச்சூழல் உகந்த பொருட்கள் தயாரிக்கும் பணியை பார்வையிட்டார். சர்தார் சரோவர் அணை முழு கொள்ளவை எட்டியதை அடுத்து அங்கு பூஜை செய்தார் இதைத்தடர்ந்து கோயிலுக்கு சென்று வழிபட்டார். இதை முடித்துக்கொண்டு குஜராத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி கிராமங்களும் நகரங்களும் குஜராத்தில் நீர் வழிப்பாதையில் இணைக்கப்பட்டுள்ளது இது படேலின் கனவை நிறைவேற்றியுள்ளது முதல்முறையாக சர்தார் சரோவர் அணை நிரம்பி உள்ளது இந்த அணை குஜராத் மகாராஷ்டிரா ராஜஸ்தான் மாநிலங்களுக்கு நீர் தேவையை நிறைவேற்றி வருகிறது.  இயற்கையை பாதுகாப்பது நம்முடைய கடமை நாட்டின் பெரிய சொத்து இயற்கை.சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் மூலம் வளர்ச்சி பெற முடியும் என்பது நமது கலாச்சாரத்தில் நம்பப்படுகிறது அது இன்று உறுதியாகியுள்ளது சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான சரியான நேரம் வந்துவிட்டது எதிர்காலத்திற்கு தண்ணீர் சேமிக்க வேண்டும் இதற்கு நிலையான வளர்ச்சி தான் தேவை. ஒரு துளி நிறைய பயிர் என்பது தாரக மந்திரமாக இருக்க வேண்டும் சொட்டுநீர் பாசன திட்டங்கள் விவசாயிகளுக்கு பெரிய பலன் அளித்து வருகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிராக ஒவ்வொரு குடிமகனும் போராட வேண்டும் காஷ்மீர் மற்றும் லடாக் பகுதி மக்கள் வேறுபாட்டை சந்தித்து வந்தனர் தற்போது இதிலிருந்து விடுபட்டு பட்டேல்  கண்ட ஆசை நிறைவேற்றப்பட்டது. பல ஆண்டுகள் இந்த பிரச்சினையை தீர்க்க திட்டம் தீட்டி நிறைவேற்றினோம் என்று கூரினார்.