பாரதம் முழுவதும் இஸ்ரோவின் விண்வெளி கண்காட்சி

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ, டாக்டர் விக்ரம் சாராபாயின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் பொருட்டு ஆகஸ்ட் 12 முதல் தொடர்ந்து ஒரு வருடம் கொண்டாட முடிவு செய்து இஸ்ரோவின் விண்வெளி காட்சிகள், பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள், பத்திரிகையாளர்களுக்கு விருதுகள், விஞ்ஞானிகளின்  சாதனைகள்  இடம்பெறுகிறது. விக்ரம் சாராபாய் பிறந்த ஆமதாபாத்தில் தொடங்கி இந்த கண்காட்சி வருடம் முழுக்க கொண்டாடப்பட்டு 2020 ஆகஸ்ட் 12 திருவனந்தபுரத்தில் நிறைவடைகிறது. இந்தக் கண்காட்சி தற்போது திருநெல்வேலியில் செப்டம்பர் 5 முதல் 8 வரை நடந்தது. மேலும் இது மதுரை, திருச்சி, கோவை மாவட்டங்களில் நடைபெற இருக்கிறது. கண்காட்சியை பார்வையிடும் ஒருவர் செயற்கை கோள்கள் குறித்த நடவடிக்கைகளையும் இது எவ்வாறு மக்களுக்கு பயன் பயன்படுகிறது என்பதையும் தெளிவாக அறிந்து கொள்ள முடியும். மினி இஸ்ரோ என்று அழைக்கப்படும் இந்த கண்காட்சியில் இஸ்ரோவின் முன்னேற்றங்கள் சாதனைகள் இடம்பெறுகின்றன. சிறுவர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அனைவரிடமும் அறிவியல் ஆர்வத்தை உருவாக்குவதற்காகவும் ஊக்குவிப்பதற்காகவும் இது அமைகிறது. முதல் ராக்கெட் ஏவுதளத்தை கேரள மாநிலம் தும்பாவில் அமைத்தபோது மீனவர்கள் அச்சம் தெரிவித்தனர் ஆனால் இப்போது  செயற்கைகோள்கள் மூலம் கடலில் மீன் வளம் புயல் எச்சரிக்கை போன்றவற்றை அறிந்து கொள்ள முடிகிறது. அன்றாட வாழ்க்கையில் இஸ்ரோ நமக்கு என்னென்ன தேவைகளுக்கு உதவுகிறது என்பதையும் நம் வாழ்க்கையை பாதுகாக்க எவ்வாறு துணைபுரிகிறது என்றும் இந்த கண்காட்சியில் தெளிவாக விளக்கப்படுகிறது. இதேபோல கண்காட்சியில் அறிவியல் ஆலோசனைகளும் கருத்துக்களும் வழங்கப்படுகிறது நாம் இடது கையை பயன்படுத்தும் போது தான் மூளையின் வலது பாகம் தூண்டப்படுகிறது. மூளையின் வலது பாகம் தான் நம் படைப்பாற்றலுக்கானது எனவே புதியவற்றை படைக்க வலது கை பயன்பாட்டுக்கு இணையாக இடது கையையும் பயன்படுத்த வேண்டும் என மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.