பாஜக வேல் யாத்திரை; பதற்றமாகும் மற்ற கட்சிகள், ஏன்?

தமிழக பா ஜ க தலைவர் டாக்டர் முருகனின்  வேல் யாத்திரை தமிழ்க்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளுக்கு தரிசனம் செய்யும் நிகழ்வாக  வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. திருத்தணியில் துவங்கிய இந்த யாத்திரை ஆளும்கட்சியின் அரசியல் தலையீடுகளால் நாளொரு போராட்டம் பொழுதொரு கைது படலம் என்று தொடர்ந்தது. சென்ற மாதம் நவம்பர் 6ம் தேதி திருத்தணியில் ஆரம்பித்து ஆரம்பித்து திருவொற்றியூர், தாம்பரம் ,செங்கல்பட்டு, வேலூர் ,திருவண்ணாமலை, கடலூர், பண்ருட்டி, கோவை, சேலம் என வெற்றிகரமாக பவனி வந்தது. இதனிடையே தமிழகத்தை தீடீரென்று தாக்கிய நிவர் புயலின்  காரணமாக யாத்திரை நிறுத்தப்பட்டு தொண்டர்கள் அனைவரும் பொதுமக்களுக்கு புயல் நிவாரண பணிகளில் ஈடுபட வலியுறுத்தப்பட்டது. பின்னர் யாத்திரை நான்காம் தேதி சுவாமிமலை பழமுதிர் சோலை திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளுக்கு சென்று டிசம்பர் 5ம் தேதி திருச்செந்தூரில் உள்ள முருகன் கோயில் உண்டியலில் வேல் காணிக்கையாக சமப்பிக்கப்பட்டு யாத்திரை நிறைவு செய்யப்பட்டது.

இந்த யாத்திரை துவங்கியதில் இருந்தேமுன்னதாக நடைபெறும் பொதுக் கூட்டத்துக்கு மட்டுமே அனுமதி வழங்கிய காவல்துறை அதனை தொடர்ந்து     நடத்தப்படும் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கவில்லை. இல்லாத கொரோனா  பரவலை  காரணம் காட்டி பாஜகவின் வேல் யாத்திரையை தடை செய்தவர்கள்  அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் தமிழக  முதல்வர் நடத்திய மாவட்டம் தோறும் மக்களை நேரில் சந்தித்து  குறைகளை கேட்கும் நிகழ்ச்சி, மக்கள் நலத்திட்டங்களை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி, திமுக வின் அரசியல் ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி, தூத்துக்குடி  பனிமயமாத ஆலய திருவிழா சென்ற வாரம் கன்யாகுமரியில் நடைபெற்ற புனித அந்தோனியார் கோயில் திருவிழா போன்ற நிகழ்சிகளில்  பரவாத கொரணா ஹிந்துக்களின் கோயிலுக்கு செல்வதன் மூலம் பரவிவிடும் என்பது ஏற்புடையதாக இல்லை. ரம்ஜான் பக்ரீத்  பண்டிகைகளுக்கு அனுமதி என்று தாராளம்  காட்டும் அரசு மாறாக  ஹிந்துக்களின் பண்டிகையான விநாயகர்  சதுர்த்தி, தீபாவளிக்கு தடை என்று பெருபான்மை ஹிந்துக்களிடம்  அநீதியுடன் பாரபட்சமாகவும் நடந்து கொள்கிறது. இவர்களின் நோக்கம் கொரணா பரவலை காரணம் காட்டி பாஜகவின் யாத்திரையை மட்டுமே தடை செய்வது ஏனெனில் இவர்களின் ஜம்பம் சிறுபாண்மை மத அமைப்புகளிடம் செல்லுபடியாகாது அதனால் அவர்களுக்கு பணிந்து போகும்  அதிமுக அரசு பெரும்பான்மை ஹிந்துக்களை அடிபணிய செய்கிறது எல்லா சட்ட திட்டங்களுக்கு  இந்துக்களை மட்டுமே   குறிவைக்கிறது. இந்த அரசின் நோக்கம்   கொரோணாவை கட்டுப்படுத்துவதில்லை மாறாக  தமிழகத்தில் பாஜக வளருவதை கட்டுப்படுத்துவதே என்பதுதான் உண்மை.

முன்னதாக திருச்செந்தூரில் ஏற்கனவே தொண்டர்கள்  தங்குவதற்காக புக்கிங் செய்யப்பட்ட மண்டபங்களை அதன் உரிமையாளர்களை மிரட்டி உருட்டி தங்க அனுமதி மறுப்பு, பொது கூட்டத்திற்கு கலெக்டர் அனுமதி மறுப்பு ,பொது கூட்ட மேடையை திறந்த வெளியில் அமைக்க மறுப்பு என்று ஆயிரத்தெட்டு முட்டுகட்டைகள் போலீசாரால் விதிக்கப்பட்டுள்ளது . இது கூட்டணியில்இருந்து கொண்டே சகோதர கட்சியின் வளர்ச்சியை தடுக்கும் விபரீத முயற்சியோ என்று சந்தேகப்பட வைக்கிறது. இது ஒருவேளை தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்யும் கழகங்களுக்குள் மறைமுகமாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஒப்பந்தமாக இருக்குமோ என்ற சந்தேகத்தையும்  எழுப்புகிறது.

ஒருபக்கம் பாஜகவின் மேலிட தலைவர்களிடம் பனிந்து பவ்யம் காட்டுவதும் தமிழக தலைவர்களை உதாசீனம் செய்யும் முன்னாள் முதல்வரின் உத்தியை எடப்பாடி பழனிசாமியும் கையாளுகிறாரோ என்னவோ?  எது எப்படியோ இன்னும்  மூன்று மாத காலத்தில் வெளியிடப்படும் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு, கட்சிகளின் கூட்டணி முடிவுகள் அடுத்து ஆட்சியமைக்க போகும் கட்சி எது என்பதனை  தீர்மானிக்கும்.