அறநிலையத்துறை அலச்சியம்

நாகை, தோப்புத்துறையில் உள்ள பழமைவாய்ந்த வடமறைக்காட்டீஸ்வரர் கோயிலில் உள்ள அம்மன் சன்னதி அண்மையில் பெய்த மழையில் முழுவதுமாக இடிந்து விழுந்தது. கோயில்களை அறநிலையத்துறை முறையாக பராமரிக்கா ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

இதே போல கோவை இடிகரை பெருமாள் கோயிலின் 150 வருட பழமையான ரதங்களை முறையாக பராமரிக்காமல், அப்புறப்படுத்திவிட்டு, அதற்கு பதிலாக புதிய ரதங்கள் தயாரிக்கப்படுகின்றன. முறையான அறங்காவலர் குழு, திருப்பணி குழுக்கள் இல்லாமல் தன்னிச்சையாக முடிவெடுத்து இதை செயல்படுத்துகிறது அறநிலையத்துறை.  இதற்காக பொது மக்களிடம் மூன்று கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. வசூலித்த பணத்துக்கு முறையான ரசீதுகளும் தரப்படவில்லை. எனவே, இதில் முறைகேடு நடந்திருக்கவும் வாய்ப்புள்ளது. இதை குறித்து திருச்சி ரங்கராஜன் நரசிம்மன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.