பிசு பிசுத்து போன பாரத் பந்த்

 மத்திய அரசு புதிதாக கொண்டுவந்த விவசாய சட்டங்கள் மூலம் பாதிப்படைந்த பஞ்சாப், மகாராஷ்டிரா மாநில மண்டி கமிஷன் ஏஜெண்டுகள் தங்களது ஆதரவாளர்களை திரட்டி டெல்லியில் விவசாயி களின் போராட்டம் என்ற பெயரில் ஆர்பாட்டங்களையும் போராட்டத்தையும் நடத்தி வருகிறது. யார் இந்த கமிஷன் ஏஜெண்டுகள் என்றால் ஐந்துக்கும் பத்துக்கும் அல்லல்படும் சாதாரண விவசாயிகள் இல்லை இவர்கள். .வருடத்துக்கு 500 கோடி 1000 கோடி சம்பாதிக்கும் கார்பொரேட் விவசாயிகள். ஆடி , லும்பினி ,பென்ஸ் கார் களில் வலம் வரும் இவர்கள் கோடிகளில் சம்பாதிக்கும் விவசாய வருமானத்துக்கு ,ஒரு பைசா கூட வரி கட்டுவதில்லை .மேலும் மாலையானால் உற்சாகபானம் அருந்தி மகிழ வீட்டிலேயே பார் வசதியை ஏற்பாடு செய்துகொண்டு உல்லாசவாழ்க்கை வாழும் கோடீஸ்வரர்கள்.

 இவர்கள் காலம் காலமாக சாதாரண ஏழை விவசாயிகளிடம் விளைபொருட்களை கொள்முதல் என்ற பெயரில் வாங்கி கைமாற்றிவிடும் விவசாய விளைபொருட்களுக்கு 8% கமிஷனை பெற்றுக்கொண்டு அதில் 6% கமிஷனை மாநில அரசுக்கும் 2%கமிஷனை இவர்களும் பெற்று கொள்கிறார்கள். மத்திய அரசின் இந்த புதிய விவசாய மசோதா இந்த கமிஷன் மண்டிகளை மட்டுமல்லாமல் நேரடி விற்பனை செய்ய வழிவகை செய்துள்ளது .விவசாயிகள் தங்களது விளைபொருட்களுக்கான கட்டுப்படியாகும் விலையை அவர்களையே நிர்ணயம் செய்து கொண்டு காஷ்மீர் முதல் கன்யாகுமரிவரை எங்கு வேண்டுமானாலும் யாருக்குவேண்டுமானாலும் விற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது . இதன் மூலம் இடைத்தரகர்களின் கொட்டம் அடக்கப்பட்டு விவசாயிகள் விடுதலை பெறுகிறார்கள். மேலும் கமிஷன் என்ற பெயரில் கொள்ளை லாபம் சம்பாதித்து வந்த பஞ்சாபின் பாதால் குடும்பம் மட்டும் ஒரு வருடத்திற்கு 500 கோடியை கமிஷனாகவும் மகாராஷ்டிராவில் சரத்பவரின் மகள் சுப்பிரிய சுலே மட்டும் வருடத்துக்கு 1600 கோடி ரூபாய் சம்பாதிப்பதாகவும் சொல்லப்படுகிறது.இப்படிப்பட்ட அரசியல்வாதிகளின் சுயநலத்திற்காக அப்பாவி விவசாயிகளை அரசுக்கு எதிராக போராடத் தூண்டுகிறார்கள்.

 மத்திய அரசு விவசாயிகளை படுகுழியில் தள்ளபோவதாகவும் அதனை தாங்களே தடுத்து நிறுத்த உள்ளதாகவும் மக்களிடம் கபட நாடகம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். காலம் காலமாக விவசாயி தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கான விலையை அவர்களே நிர்ணயிக்க முடியவில்லை என்று குறைபட்டு கொண்டவர்கள் தற்போது அரசே அப்படிப்பட்ட நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதை எதிர்க்கிறார்கள். கரணம் தங்களது சுயநலம் மத்திய அரசின் மீது எந்த விதமான குற்றச்சாட்டையும் நேரடியாக சொல்ல முடியாததால் தற்போது அவர்கள் விவசயிகள் வேஷம் போட்டுக் கொண்டு எதிர்க்கிறார்கள் . தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் ஏற்கனவே விவசாயிகளுக்கு கமிஷன் இல்லாமல் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்று சொன்னதை மறந்து விட்டு இரட்டை நிலைப்பாட்டை எடுத்துள்ளார்கள் . காங்கிரஸும் இதே நிலையில்தான் உள்ளது மத்திய அரசை குறை சொல்ல இருந்தவர்கள் தற்போது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்கிறார்கள்.

 இதற்காக நாடு முழுவதும் பாரத் பந்த் என்ற பெயரில் நாடு முழுவதும் உள்ள எதிர்கட்சிகள் சேர்ந்து போராட்டத்தை அறிவித்தது அந்த போராட்டம் கேரளா ,மேற்கு வங்கம், ஜார்கண்ட் ,டெல்லி ,மஹாராஷ்டிரா , பஞ்சாப் போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் ஓரளவுக்கு பாதிப்பு இருந்தது தமிழகம் உள்ளிட்ட நாட்டின் மற்ற பகுதிகளில் எந்தவிதமான பாதிப்பும் இல்லை. எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இங்கு தி மு கவும் தனது பங்கிற்கு டெல்லி போல தமிழகமும் குலுங்கட்டும் என்று போர்ப் பரணி பாடியது.ஆனால் இங்கு பிசுபிசுத்து போன பந்த் ஐ நினைத்து அணைத்து ராஜா தந்திரங்களும் வீணாக போய்விட்டதே என்று வடிவேலு பாணியில் அழுது கொண்டிருப்பார்கள்.அந்த அளவுக்குத்தான் இங்கு பந்த் கான மக்களின் ஆதரவு இருந்தது. எது எப்படியோ பிரதமர் மோடியின் மக்கள் நலத்திட்டங்களுக்கு மக்கள் ஆதரவுஉள்ளது என்பது இந்த பிசுபிசுத்துப்போன பந்தினால் தெரிய வருகிறது.

மண்டிகளின் முந்தய வரலாறு

  நமது விவசாயிகள்தான் நாட்டின் முதுகெலும்பாக உள்ளதை உணர்ந்த அலாவுதீன் கில்ஜி விவசாய விளை பொருட்களை அரசாங்கத்திடம் மட்டுமே விற்க வேண்டும். அதற்கான விலையையும் அரசே நிர்ணயிக்கும் என்ற திட்டத்தை முதன் முதலில் கொண்டுவந்தான். அடுத்து நம்மை அடிமைப்படுத்தி அரசாட்சி செய்த ஆங்கிலேயர்கள் அதனை கடுமையாக்கி மொத்த விளைபொருட்களையும் விதைநெல் உட்பட அனைத்தையும் வரியாக கொள்ளையடித்து தனது நாட்டிற்கு அனுப்பி வைத்தான் .இதனால்தான் நமது நாட்டில் முதல் உலக போரின் போது செயற்கையாக பஞ்சம் ஏற்பட்டது. அதன் காரணமாக பல்லாயிரக் கணக்கானோர் மாண்டுபோயினர். இதையே தொடர்ந்து சுதந்திர பாரதத்திலும் காங்கிரஸ் அரசும் இடைத்தரகர்களுடன் கைகோர்த்து கொண்டு கொள்ளையை தொடர்ந்தனர் . இந்த புதிய விவசாய சட்ட திருத்த மசோதா உண்மையில் விவசாய சுதந்திர மசோதா என்றே அழைக்கப்படவேண்டும் அது இடைத்தரகர்களின் கெடுபிடியை நீக்கி விவசாயிகளுக்கு முழு சுதந்திரத்தை அளித்துள்ளது. இதனால் கொள்ளை லாபம் சம்பாதித்து வந்த இடைத்தரகர்கள் எதிர்க்கிறார்கள்.