பாங்க் ஆப் சீனாவின் முன்னாள் தலைவர் கைது

ஊழல் குற்றச்சாட்டில், ‘பாங்க் ஆப் சீனா’வின் முன்னாள் தலைவர் லியு லியாங்கே, 62, கைது செய்யப்பட்டார். நம் அண்டை நாடான சீனாவில், அந்நாட்டு அரசு கட்டுப்பாட்டின் கீழ், பாங்க் ஆப் சீனா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் தலைவராக, 2019 – 2023 மார்ச் வரை, லியு லியாங்கே பதவி வகித்தார்.

பாங்க் ஆப் சீனா வங்கி தலைவராக இருந்த போது, சட்ட விரோதமாக கடன் வழங்குதல், லஞ்சம் மற்றும் இதர சலுகைகளை பெற அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக, லியு லியாங்கே மீது, சமீபத்தில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு குழு குற்றம் சாட்டியது. இதையடுத்து, சீன கம்யூ., கட்சியில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார். இந்நிலையில், இந்த ஊழல் புகார் தொடர்பாக, லியு லியாங்கேவை நேற்று போலீசார் கைது செய்தனர்.