பரதன் பதில்கள்: பாரதியின் ‘ஆத்திச்சூடி’ பற்றி?

பாரதியின்ஆத்திச்சூடிபற்றி?

– வி. கமலக்கண்ணன், பெரம்பூர்

 

அச்சம் தவிர்… ஆண்மை தவறேல்” ‘துன்பம் மறந்திடு… தூற்றுதல் ஒழி… தெய்வம் நீ என்றுணர்.. தேசத்தைக் காத்தல் செய்… ‘ரௌத்திரம் பழகு’ புத்துணர்ச்சித் தரும் வரிகள். புதிய கோணத்தில் சிந்தனை தரும் வார்த்தைகள்.

 

மற்றவர்களுக்கு உதவுவது சிறந்ததா அல்லது கோயில் குளம் என்று பூஜை வழிபாட்டில் ஈடுபடுவது சிறந்ததா?

– இ. கவிதா, மதுரை

 

ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களும் சரியாக இருந்தால்தான் அது செல்லுபடியாகும்.

 

கந்தசஷ்டி கவசத்தின் சிறப்பென்ன?

– பி. சண்முகசுந்தரம், கன்னியாகுமரி

‘துதிப்போர்க்கு வல்வினை போம். துன்பம் போம்…’

வீரனின் மார்பிலுள்ள கவசம் அவனைப் பாதுகாக்கிறது. அதுபோல் கந்த சஷ்டி கவசம் பக்தர்களைப் பாதுகாக்கும் கவசமாக விளங்குகிறது.

 

கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு வந்தால் என்ன செய்வது?

– வி. முருகன், சேலம்

 

இதெல்லாம் நல்ல அனுபவம் வாய்ந்த குடும்பஸ்தர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி. ஒரு சிறிய எச்சரிக்கை… எந்தக் காரணம் கொண்டும், ‘எனக்கும் என் மனைவிக்கும் கருத்து வேறுபாடு’ என்று வெளியே யாரிடமும் சொல்லாதீர்கள் – அது ஆபத்தானது.

 

ஜெயலலிதாவின் வீழ்ச்சிக்கு என்ன காரணம்?

– விபாஷிதா குமார், சென்னை

தீயோர் நட்பு கேடாய் முடியும். தீயோர் எந்த உருவத்திலும் வரலாம். ‘ஜெ’க்கு ‘தோழி’ உருவத்தில் வந்தது

 

இதய நோயாளிகள் பயன்படுத்தும் மருத்துவ உபகரணங்களின் விலை குறைந்துள்ளது பற்றி?

– ஜி. ராமசுப்பிரமணியன், அரக்கோணம்

 

ஈணூதஞ் உடூதணாடிணஞ் குணாஞுணணாண் என்ற உபகரணத்தின் பழைய விலை ரூ. 1,21,000 – தற்போது ரூ. 31,000. பெட்ரோல் விலை ஒரு ரூபாய் கூடினாலும் கூச்சலிடும் ஊடகங்களும் தலைவர்களும் மோடியின் சாதனையை பாராட்டத் தயங்குவது ஏனோ!

 

அன்றைய முதல்வர்இன்றைய முதல்வர் ஒப்பிடுக!

– சி. பரத், கோயம்புத்தூர்

 

எப்போதும் தனது வலது தோளில் துண்டு அணிந்திருக்கும் காமராஜர், ஒருமுறை இடது தோளில் துண்டு இருப்பதைக் கண்டு நிருபர்கள், ஏன் இந்த மாற்றம் என கேட்டதும், தோளில் இருந்த துண்டை எடுத்துக் காண்பித்தார். அங்கே சட்டை கிழிந்திருந்தது. அப்போது கர்ம வீரர் முதலமைச்சர்.

இப்போதைய முதல்வர்களைத் தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோமே!

 

* குறியிட்ட கேள்விகளுக்கு புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.