பயங்கரவாத நிதி திரட்டல்

விவசாய போராட்டத்தை, ஜல்லிக் கட்டு, சி.ஏ.ஏ போன்றே வன்முறை போராட்டமாக முன்னெடுக்க காலிஸ்தான், முஸ்லிம் பயங்கரவாதிகள் ஊடுருவி யுள்ளதை உளவு அமைப்புகளும் அரசும் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளன. இதற்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ, பாபர் கல்சா இன்டர்நேஷனலுக்கு ரூ. 5 கோடி கொடுத்துள்ளது. இத்தாலியில் சந்தோக் சிங் லல்லி, ஸ்வரஞ்சித் சிங் கோத்ரா ஆகியோர் 2 லட்சம் பிரிட்டிஷ் பவுண்டுகளையும், கனடாவில் ஜோகிந்தர் சிங் பாஸ்ஸி ரூ. 3 கோடியையும் திரட்டி அனுப்பியுள்ளனர். மேலும் காலிஸ்தான் புலிகள் படை, சீக்கியர்களுக்கான நீதி (எஸ்.எஃப்.ஜே), சீக்கிய மாணவர்களின் பிரிட்டிஷ் அமைப்பு போன்ற பல காலிஸ்தான் அமைப்புகளும் இதற்காக நிதி திரட்டியுள்ளனர். Gofundme.com போன்ற நிதி திரட்ட ஆன்லைன் தளங்களும் இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. முகநூல், வாட்ஸப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களும் இந்த பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இதற்கு கனடா, சீனா உள்ளிட்ட நாடுகளும் மறைமுக உதவி செய்துள்ளன என்றும் கூறப்படுகிறது.