பயங்கரவாதம் ராகுலின் ‘பூகம்ப’ டயலாக் இளவரசர் பூச்சாண்டி காட்டலாமா?

பாரத பிரதமர் நரேந்திர மோடி 2016ம் வருடம் நவம்பர் மாதம் 8ந் தேதி இரவு 8 மணிக்கு பற்ற வைத்த வெடிகுண்டு, காங்கிரஸ் கட்சியை ஒரு உலுக்கு உலுக்கி விட்டது. இன்னும் காங்கிரஸ் தலைவர்களின் ஒப்பாரி இந்த ஒப்பாரியில் திருவாளர் சிதம்பரமும் சேர்ந்து கொண்டு, 2016ம் ஆண்டின் மிகப் பெரிய மோசடி என வர்ணித்துள்ளார். பாரதத் திரு நாட்டின் நிதி அமைச்சராக பதவி வகித்தவர், கல்லூரியில் இளங்கலை பௌதிகம் படித்த பொருளாதார மேதை, இந்த நாட்டில் கருப்புப் பணம் பெருக வழி வகுத்தவர் என்றால் மிகையாகாது. சன்டே கார்டியன் பத்திரிகை திருவாளர் சிதம்பரத்தை பற்றி குறிப்பிடும் போது, Friend, father & philosopher of Black Money என தலைப்பிட்டு கட்டுரை வெளியிட்டுள்ளது.

ஏழைகளுக்காக வாழ்கின்ற கட்சி காங்கிரஸ் கட்சி என மார்தட்டும் திருவாளர் பரிசுத்தம் ராகுல் காந்திக்கு ஒரு சம்பவத்தை நினைவு படுத்த வேண்டும். 1965 ஜனவரி 9, 10 தேதிகளில் துர்காபூரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் காமராஜ், ஜெகஜீவன் ராம் ஆகியோர் பேசிய பேச்சுக்களை கவனிக்க வேண்டும். இந்த நாட்டின் செல்வங்கள் 10 முதல் 15 பணக்கார குடும்பங்களின் கையில் உள்ளது என்று காமராஜர் பேசினார். கள்ளச் சந்தையிலும், மோசடி, ஊழல் போன்ற காரியங்களில் ஈடுபடுபவர்கள் யார் என்பது நன்கு தெரிந்தும் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என அவர் பேசியது, ஆண்டுகள் பல கடந்தாலும், ஐம்பதாண்டு காலம் ஆட்சி செத காங்கிரஸ் கட்சி ஏன் கருப்புப் பணத்தை ஒழிக்கவில்லை என்ற கேள்வியை எழுப்பியது.

காங்கிரஸ் கட்சியின் ஊழலால் நாடே நாறிபோனது. 1948ல் ராணுவத்திற்காக வாங்கிய ஜீப் ஊழலில் தொடங்கி, தற்போது வெளி வந்துள்ள ஹெலிக்காப்டர் ஊழல் வரை நடத்திய பஞ்சமா பாதகர்கள் வைக்கும் ஒப்பாரி அக்கிரமம். வெளிச்சத்திற்கு வராமல் நடத்திய ஊழல்கள் பல உள்ளன. 6.12.2013 அன்று முன்னாள் சட்ட அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ராம் ஜெத்மாலனி, ப.சிதம்பரத்திற்கு எழுதிய ஒரு கடிதத்தில், சிதம்பரமும் என்.டி.டி.வி நிர்வாக இயக்குநர்களும் சேர்ந்து அடித்த கொள்ளை 5,500 கோடி ரூபா என குறிப்பிட்டதற்கு, இன்று வரை சிதம்பரத்திடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. இந்த மோசடியின் காரணமாக ரூ3,500 கோடி வரி ஏப்பு குறிப்பிட்ட பின்னர் கூட சிதம்பரம் நேரடியாக பதில் கூறுவதற்கு மாறாக, இந்த விவகாரத்தை வெளியே கொண்டு வந்த அதிகாரி எஸ்.கே. ஸ்ரீவத்சவா என்பவர் மீது நடவடிக்கை எடுத்தது தான் கோரம்.

சிதம்பரத்தின் இன்னும் சில திருவிளையாடல்கள்: திவாலான நிறுவனமான என்ரான் விவகாரம், உலகிலேயே மிகவும் மோசமான, மோசடி நிறுவனம் என அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகள் அறிவித்துள்ள நிறுவனம். எந்த நாட்டின் சட்டத்தையும் மதிக்காமல் செயல்படும் நிறுவனம். இந்த நிறுவனத்தின் சட்ட ஆலோசகர்

ப.சிதம்பரம். 3.6.2014 அன்று IBTL என்ற வெப் Who wil investigate Chidambaram & Co for Dabhol Loot? என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. The Vanderbilt Journal of Transnational Law என்ற ஜர்னலில் 907-ம் பக்கத்தில் இந்தியாவின் வர்த்தக துறை அமைச்சர் ப.சிதம்பரம் என்ரான் நிறுவனத்தின் உண்மை நிலையை தெரிந்து கொள்ளாமல், முழு பரிந்துரை செதுள்ளார். இதற்காக என்ரான் நிறுவனம் குறிப்பிட்ட தொகையை வழங்கியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

என்ரான் – தாபோல் மீது ஒரு உண்மையை 22.2.2002 அன்று அமெரிக்க பிரதிநிதிகள் சபை, தாபோல் திட்டம் தொடக்கத்திலிருந்தே சர்ச்சைக்குரியதாக இருந்தது, சட்ட மீறல் செய்தது என குறிப்பிட்டுள்ளது. உலக நாடுகளில் திவாலான நிறுவனமான என்ரான்-தாபோல் நிறுவனத்திற்கு சிதம்பரம் பரிந்துரை செதது ஏன் என்ற கேள்விக்கு பதில் கிடையாது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ1,76,000 கோடி இழப்பு என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த போது, ஆ.ராசா குற்றவாளியாக்கப்பட்டார். இன்று மோடி மீது குற்றச்சாட்டை வைக்கும் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சில கேள்விகளுக்கு இன்னும் முறையான பதில் கூறவில்லை. அலைக்கற்றை விலையை தீர்மானிப்பதில் தொலை தொடர்பு கமிஷன் பங்கு முக்கியமானது. 10.1.2008 அன்று ஒதுக்கீடு செயும் முன் வரை தொலை தொடர்பு கமிஷன் கூட்டம் கூட்டப்படவில்லை. 15.1.2008 அன்று கமிஷன் கூட்டத்தில், 2001ம் ஆண்டின் அடிப்படையில் விலை ஒதுக்கீடு செதது தவறு என தெளிவாக குறிப்பிட்ட பின்னர், மத்திய அரசு நினைத்திருந்தால், ஒதுக்கீட்டை ரத்து செதிருக்க முடியும். ஏன் ரத்து செயவில்லை? ஆரம்ப கட்ட அலைக்கற்றைகளை 2001-ம் ஆண்டு அடிப்படையில் விற்பனை செய ப.சிதம்பரமும், ஆ.ராசாவும் ஒத்த கருத்தை கொண்டிருந்தார்கள் என மன்மோகன் சிங் கூறியதை ப.சிதம்பரம் ஏற்று கொள்வதாக இருந்தால், ஊழலில் சிதம்பரத்திற்கும் பங்குண்டு. இதை முழுமையாக விளக்க ப.சிதம்பரம் முன்வர முடியுமா?

இன்று வரை காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி வா திறக்கவில்லை. காரணம் புரியாமல் தவிக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கு தீனி கொடுப்பவர் இளவல் ராகுல் காந்தி. மோடி மீது குற்றச்சாட்டு கூற வேண்டும் என்பதற்காகவே குற்றச்சாட்டுகளை முழுமையாக கூறாமல், மோடி மஸ்தான் வேலையை செது கொண்டு இருக்கிறார். மோடி மீது ஊழல் பற்றிய முழு விவரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், அதை நாடாளுமன்றத்தில் மட்டுமே கூறுவேன் என்று கொக்கரிக்கும் ராகுல் காந்தியை அங்கே பேசக் கூடாது என்று கூறினார்கள்? விவாதம் நடத்தத் தயார் என்று கூறிய பின்னரும், கூச்சல் போடுவது காங்கிரஸ் கட்சியா அல்லது பாரதிய ஜனதா கட்சியா என்பதை மக்களிடம் விளக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக ஆட்சியாளர் (காங்கிரஸ் கட்சியினர்) 2012ல் நடந்த மிகப் பெரிய நில பேர ஊழல் இரண்டு லட்சம் கோடி பற்றி பேசுவதில்லை. சிறுபான்மையினத்தவற்கு காவலன் நாங்கள் தான் மார் தட்டும் காங்கிரஸ் கட்சி, வக்ஃப் வாரியத்திற்கு சோந்தமான 27,000 ஏக்கர் நிலங்களை சட்ட விரோதமாக அரசியல்வாதிகளுக்கு குறிப்பாக ஆளும் கட்சியினருக்கு ஒதுக்கீடு செத வகையில் 1.5 லட்சம் கோடி முதல் 2 லட்சம் கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக சிறுபான்மை கமிஷன் சேர்மன் Anwar Maniapddy தெரிவித்த பின்னரும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

காங்கிரஸ் கட்சியின் ஊழல் மலிந்த ஆண்டு என்றால் 2004 முதல் 2014 வரை, அதாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் இரண்டிலிலும் நடந்த மிகப் பெரிய ஊழல்கள் எல்லாம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆனால் வெளிச்சத்திற்கு வராத ஊழல்கள் பற்றிய விவரங்களை கூட ஊடகங்களும், தொலைக் காட்சியினரும் கண்டு கொள்வதில்லை. 2008-ம் வருடம் மே மாதம் முதல் 2012-ம் வருடம் மார்ச்சு மாதம் வரை தணிக்கை பிரிவு, ரயில்வேயின் மூன்று பிரிவுகளில் இரும்பு தாது ஏற்றுமதியில் முறைகேடுகள் நடந்த வகையில் 50,000 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக அரசுக்கு தகவல் கொடுத்தும் கூட நடவடிக்கை எடுக்கவில்லை. ஏன் எடுக்கவில்லை என்பதை தற்போது கூச்சல் போடும் காங்கிரஸ் கட்சியினர் தெரிவிப்பார்களா?

பாரத தேசத்தின் மதிப்பை வெளிநாடுகளில் ஏலம் போட வைத்த கட்சி காங்கிரஸ் . ஆண்ட்ரிக்ஸ் – தேவாஸ் ஒப்பந்தத்தில் நடந்த ஊழலை மறைக்க, ஒப்பந்தத்தை ரத்து செததின் விளைவாக, சர்வதேச தீர்ப்பாயத்தின் மூலம் இந்திய அரசு 6,669 கோடி ரூபா இழப்பீடு வழங்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அவல நிலைக்கு காரணம் காங்கிரஸ் கட்சியும், பொருளாதார நிபுனர் திருவாளர் மன்மோகன் சிங்கும் என்பதை காங்கிரஸ் கட்சி ஒப்புக் கொள்ளுமா?

1992 ஆண்ட்ரிக்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது, அலைக்கற்றைகளை வர்த்தக ரீதியாக ஒதுக்கீடு செயும் நோக்கத்துடன். 2005ம் ஆண்டு தனியார் நிறுவனமான தேவாஸ் மல்டி மீடியாவிற்கு, 20 ஆண்டுகள் வரை அலைவரிசையை பயன்படுத்திக் கொள்ள மலிவான விலையில் அதாவது ரூ.1,000 கோடிக்கு மட்டும் பெற்றுக் கொண்டு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் இதே நிறுவனம் பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 12,487 கோடிக்கு விற்பனை செத போது, மன்மோகன் சிங் என்ன செது கொண்டு இருந்தார்?

ஆனால், நாட்டின் கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காகவும் பாகிஸ்தான் பாரத தேசத்தின் பொருளாதாரத்தை சீர்குலைக்க செயும் கள்ள நோட்டை ஒழிப்பதற்காகவும் முன்னுரிமை தரும்போது, ராகுல் காந்தியும் சிதம்பரமும் ஒப்பாரி வைப்பது ஏன்? தான் நிதி அமைச்சாரக இருந்த போது, நடந்த இராண்டாம் அலைக்கற்றை ஊழல், நிலக்கரி ஊழல், காமன் வெல்த் விளையாட்டிலும் ஊழல், என ஊழல்கள் வெளிவந்த போது சிதம்பரம் என்ன செது கொண்டு இருந்தார்? இன்று வாள் வீச்சும் சிதம்பரம், அன்று அடங்கி ஒடுங்கி இருக்க வேண்டிய அவசியம் என்ன?