நொறுங்கத் தின்றால் நூறு வயது

வெற்றிகரமாக உண்ணாவிரதத்தை முடித்து படிப்படியாக உணவின் அளவை கூட்டி மீண்டும் எப்பொழுதும்போல் சாதாரண அளவு உணவை உணவை உண்ண ஆரம்பித்துவிட்டோம். ஆனால் அந்த உணவை எப்படி உண்பது, அளவு என்ன என்பதை பற்றி பார்ப்போம்.

நம் அனைவருக்கும் உடல் சம்பந்தபட்ட நோகள் பல வருவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மிக முக்கியமாக நம் உணவு முறையும், நாம் உண்ணும் முறையும் தான் அடிப்படை காரணங்களாக அமைகிறது.

நம் வா முதல் மலக்குடல் வரை உள்ள அந்த 30 அடி நீள ஜீரண மண்டலத்தை நாம் சீராக பராமரித்தால் நமக்கு வரும் பல்வேறு நோகளை ஆரம்பத்திலேயே வராமல் தடுத்து விடலாம். ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு, மலசிக்கல் பல சிக்கல்‘ போன்ற பழமொழிகள் நாம் நம் ஜீரண மண்டலத்தை எப்படி சரியாக வைத்துக் கொள்ளவேண்டும் என்பதை நமக்கு உணர்த்தும்.

சாதாரணமாக நாம் அனைவரும் உணவை ரசித்து, சுவைத்து மெதுவாக உண்ணாமல் அவசரமாக ஏதோ கோழி கொத்துவது போல ஒரு சில முறைகள் மட்டுமே மென்று விழுங்கி வருகிறோம்.

அதனால் நாம் உண்ணும் உணவின் சாரம் நம் உடலில் சேராமல் வீணாவதால் நமக்கு பொருள், காலம் நஷ்டங்களுடன் சேர்த்து நமக்கு தற்காலத்தில் சிறுவயது முதலே உடல் நல பாதிப்புகள் வருகின்றன.

நமக்கு நம் உணவினை எப்படி முறையாக உண்ண வேண்டும் என்று சோல்லி தர தெரிந்த மூத்தோர்களும் இல்லை, அப்படி சோல்லி தருவோர் இருந்தாலும் தற்போதைய அவசர யுகத்தில் அதற்கான நேரமும் பொறுமையும் நம்மில் யாருக்கும் இல்லை.

நாம் உண்ணும் உணவை வாயினால் நன்கு கூழ் போல அரைத்து உண்ண வேண்டும். அதாவது பாதி ஜீரணம் நம் வாயிலேயே நடந்துவிட வேண்டும். நம் வாயில் ஊறும் உமிழ்நீர் நாம் உண்ணும் உணவுடன் நன்கு கலந்து இரைப்பையை அடைய வேண்டும்.

மேலும், உணவு உண்ணும்போது இரைப்பையில் சுரக்கும் ஜீரண அமிலத்தின் தன்மையை பாதிக்காமல் இருக்கும் பொருட்டு உணவிற்கு முன் 30 நிமிடங்களும் உணவின் போதும், உணவிற்கு பிறகு 30 நிமிடங்களும் தேவைபட்டால் மிக சிறிய அளவில் நீர் அருந்தலாமே தவிர, பொதுவாக நீர் அருந்துவதை தவிர்ப்பது நலம்.

இவை நமக்கு ஒன்றும் புதிது அல்ல, அனைத்தும் வழிவழியாக நம் முன்னோர்களால் சோல்லப்பட்டு வந்தவைதான், ஆனால் கடந்த ஒரு சில தலைமுறைகளில் வளர ஆரம்பித்த விஞ்ஞான வளர்ச்சியின் விளைவாக இவைகள் நம்மால் மூட நம்பிக்கைகள் என புறம் தள்ளப்பட்டுவிட்டன.

அதன் விளைவாக உலகிற்கே ஆரோக்கியம் பற்றிய அறிவை விதைத்த நாம், இன்று மருத்துவமனைகளே கோயில், மருத்துவரே தெவம் என நினைக்கும் அளவிற்கு நோயாளிகளாக இழிநிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

உதாரணமாக, நாம் அனைவரும் பள்ளியில் படித்த ‘நொறுங்க தின்றால் நூறு வயது‘ என்ற பழமொழியினை அதன் உண்மை அர்த்தத்தை விளங்காமலேயே படித்து மனப்பாடம் செது பரிட்சையில் எழுதியதும் வசதியாக மறந்துவிட்டோம். ஆனால் அதன் உண்மையான அர்த்தத்துடன் படித்து அதன்படி உண்டு வாழ்ந்து வந்திருந்தால் இன்று மருத்துவரை நாடி ஓட வேண்டிய தேவையே இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்திருக்கலாம்.                               (இனி)