திருப்பாவை 20

நப்பின்னையிடம் கண்ணனின் நீர் தரிசனம் வேண்டி நிற்கும் ஆயர்குலச் சிறுமிகள் அவனது குணாதிசயங்களையும், நப்பின்னையின் அழகையும் வர்ணிக்கித் தொடங்குகின்றனர்.

கண்ணன் நப்பின்னைக்கு மட்டும் சொந்தமானவன் அல்லவே! அவன் எல்லோருக்கும் பொதுவானவன். எனவே அவனிடம் உக்கம் தட்டொளியும் ஆகிய விசிறியையும், கண்ணாடியையும் கேட்கிறார்கள். விசிறினால் காற்று வரும். வீசுபவனுக்கு மட்டுமல்ல, அருகிலுள்ளவனுக்கும் சேர்த்துத்தான். நம் செயல்பாடுகள் நமக்கு மட்டுமின்றி பிறருக்கும் பயன் தருவதாக அமைய வேண்டும் என்பது இதன் உட்கருத்து. கண்ணாடி உருவத்தைக் காட்டும். ஆனால், உருவத்தில் ஒட்டியுள்ள அழகையோ, அழுக்கையோ தன்னில் ஒட்டிக்கொள்ளாது. வாழ்க்கை என்றால் ஒரு தற்காலிக இடத்தில் குடியிருக்கும் உடல் போல. எந்த நேரமும் அக்குடியிருப்பைக் காலி செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்பதை விளக்குகிறது இப்பாசுரம்.