மடத்தின் மீது கல்வீச்சு

கர்நாடகாவின் கலபுராகி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 28 அன்று ஹிந்து ஜாக்ருதி சேனே என்ற அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் சித்தலிங்கேஸ்வரா சமஸ்தான மடத்தின் தலைவர் கேதார் ஸ்ரீ சுவாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், கட்டாய மதமாற்றம், லவ் ஜிஹாத், பசு வதைக்கு எதிராக வெளிப்படையாகப் பேசியிருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி முஸ்லிம்கள் மடத்தின்மீது இரவில் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால், கர்நாடக காவல்துறையினர் அங்கு பாதுகாப்பை பலப்படுத்தினர். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஹிந்து ஜாக்ருதி சேனை அமைப்பினர், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். தாக்குதல் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இப்பகுதியில் முஸ்லிம்கள் அதிகம் இருப்பதால் இங்குள்ள ஹிந்துக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக அப்பகுதி மக்களும் தெரிவித்துள்ளனர். 3 மாதங்களுக்கு முன்பாகக்கூட 14 வயது மகேஷ் கொல்லி என்ற சிறுவன் முஸ்லிம்களால் கொல்லப்பட்டு பீமா ஆற்றில் வீசப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.