தான் செய்தால் மட்டும்

மகாராஷ்டிராவில் கடந்த பா.ஜ.க ஆட்சியில் மெட்ரோ ரயில் நிலையத்திற்காக அரே காலனியில் மரங்களை வெட்டக்கூடாது என சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆர்பாட்டம் நடத்தின. தேர்தல் ஆதாயத்திற்காகவே இந்த ஆர்பாட்டங்கள் நடைபெற்றது என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். அதே சிவசேனா, காங்கிரஸ் கூட்டணியினரின் தற்போதைய ஆட்சியில் ‘மும்பை ஹார்பர் டிரான்ஸ் லிங் சாலை’ திட்டத்திற்காக 454 மரங்களை வெட்டவும், 550 மரங்களை இடம் மாற்றவும் நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னதாக பால்தாக்கரே நினைவு சின்னத்திற்காக பிரியதர்ஷினி பூங்காவில் 1000 மரங்களை வெட்ட சிவசேனா அரசு முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது.