தெய்வீக தமிழக சங்கம்; மெய்சிலிர்க்க செய்த மக்கள்

நெல்லை மண்டல பகுதியில் வார்டு பொறுப்பாளர் ஒருவர் கடந்த ஜனவரி மாதம் இருதய பாதிப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்துள்ளார். முதுகு தண்டுவட பிரச்சனையும் உள்ளது அதையும் பொருட்படுத்தாது நமது தெய்வீக தமிழக சங்கம் சார்பில் ‘தேசியம் காக்க, தமிழகம் காக்க’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 400க்கும் மேற்பட்ட குடும்பங்களை சந்தித்தார்.

மற்றொரு வார்டு  பொறுப்பாளர் ஒரு ஆட்டோ ஓட்டுநர், அதிக வீடுகளை தொடர்பு செய்வதற்காக, தனது  ஒருநாள் ஆர்டரை ரத்து செய்து நிகழ்ச்சியில் கலந்து 500 வீடுகளுக்கு குழுவாக சென்று தொடர்பு கொண்டார்.

நான் நேரடியாக தொடர்பு கொண்ட வீடுகளில் 200 வீடுகளுக்கு ஒரு வீடு என்ற அளவில் மட்டுமே மாற்று கருத்து இருந்தது. அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பு. பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு.

ஒரு வீட்டில் அன்பர் ஒருவர் கூறுகையில், இந்த புத்தகத்தை பொக்கிஷமாக கருதுகிறேன் என கூறிவிட்டு தேசியம் காக்க தமிழகம் காக்க எங்களுடைய பங்கும் நிச்சயம் உண்டு என மெய்சிலிர்க்க செய்தார். வயதான மூதாட்டி ஒருவர் கூறுகையில் ஆலயங்களில் அர்ச்சகர்கள் அனைவரும் விபூதியுடன் இந்த புத்தகத்தை இணைத்துக் கொடுக்க வேண்டும் என்று உணர்ச்சி வெளிப்பாட்டுடன் கூறினார்.

கட்சி பாகுபாடு இல்லாமல் ஹிந்து விழிப்புணர்வு புத்தகம் என்பதை உணர்ந்து மக்கள் பல்வேறு இடங்களில் ஆர்வத்துடன் படித்துப் பார்த்தனர். குறிப்பாக மதமாற்றம், இந்து குடும்பம் முறை, மக்கள் தொகை விகிதாச்சாரம், திருக்கோயில்களின் இன்றைய நிலை குறித்து மக்களிடம் இந்த புத்தகம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. தேசியம் காக்க தெய்வீகம் காக்க திருநெல்வேலி நகர்ப்புற மக்கள் தயாராகி விட்டனர்.

தெய்வீக தமிழக சங்கம் சார்பாக தமிழக மக்களை சந்தித்தபோது ஏற்பட்ட தங்களது அனுபவங்களை பிரசுரிக்க webvijayabharatham@gmail.com மின்னஞ்சளுக்கு அனுப்பவும்.

சு.சுப்பிரமணியன்
ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம்,
திருநெல்வேலி

One thought on “தெய்வீக தமிழக சங்கம்; மெய்சிலிர்க்க செய்த மக்கள்

  1. வார்டு பொறுப்பாளர்கள் எவர் ஒருவருக்கும் பெயர் கிடையாதா? அவர் எந்த தெரு, பகுதியில் வீட்டுத் தொடர்பு செய்தார் என்ற விவரங்கள் எதுவும் இல்லாமல் மொட்டைத்தலையன் குட்டையில் விழுந்தான் என்று செய்தி கொடுக்கலாமா?

Comments are closed.