சமஸ்கிருதம் பிராமண பாஷையா?

சமஸ்கிருதம் பிராமண பாஷை என்று முத்திரை இடப்படுவது தவறு. வியாசன், வால்மீகி போன்றோர் பிராமணர்கள் இல்லை. சமஸ்கிருதம் பாரதத்தின் அறிவுசார் பாரம்பரிய பொக்கிஷம். சமஸ்கிருத அறிஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது வருத்தமளிக்கிறது. சமஸ்கிருத மொழியும், இலக்கியங்களும் வெகுஜன மக்களின் சொத்து. இது அனைத்து தரப்பினரையும் சென்றடைய வேண்டும்.

சமஸ்கிருதத்தின் வளத்தை அறிந்த வெளிநாட்டு அறிஞர்கள், சமஸ்கிருதத்தில் ஆழமான ஆராய்ச்சி செய்து பல சூட்சுமங்களை கண்டறிந்து ஏதோ அவர்கள் கண்டுபிடித்தது போல பாசாங்கு செய்கிறார்கள். இதை சொன்னது வேறு யாரும் அல்ல, கேரள கம்யூனிஸ்ட் முதலமைச்சர் பிணராயி விஜயன்.

சமஸ்கிருதத்தையும் அதில் எழுதப்பட்ட மனுஸ் மிருதி, இதிகாசங்கள், புராணங்கள் குறித்தும் பேசும் திராவிட, கம்யூனிச பிரிவினைவாதிகள் இதற்கு என்ன சொல்லப்போகின்றனர்?