“தலித்கள் மதமாற்றப் படுவதற்கு முற்றுப்புள்ளி வைத்தேன்”

ஒரு தலித் கட்சி பிரமுகரிடம் மதமாற்றம் பற்றி கருத்துக் கேட்டு பேட்டி வெளியாகி யிருப்பது புதுமை… ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் சித்தாந்தம் தேசியம்” என்று எனவே அவர்களை மதவாதிகள் என்று அழைப்பதை ஏற்கமுடியாது, ‘தி ஹிந்து’வுக்கு அளித்த பேட்டியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர். கே.கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து சாதிய, மதவாத குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டாலும் பாஜகவின் கவனத்தை ஈர்த்துள்ள சில தலித் கட்சிகளில் புதிய தமிழகமும் ஒன்று. இதை எப்படி பார்க்கிறீர்கள்?

எங்கள் கட்சி முற்றிலும் தலித் கட்சி அல்ல. சமுதாய, அரசியல், பொருளாதார சமத்துவத்திற்காக போராடும் நாங்கள் தொடர்ந்து எங்களின் அடையாளத்தை மீட்டெடுத்து வருகிறோம். எல்லா சமூகங்களுக்கும் உணவு அளிக்கும் சமூகம் எங்களுடையது.

ஆர்.எஸ்.எஸ்,பாஜக சகோதர அமைப்புகள் இனவாதிகள் என அழைப்பதில் எனக்கு துளியும் விருப்பமில்லை. தேசியம் அவர்களின் அரசியல் கொள்கை, தேசத்தின் பெருமையை மீட்டெடுக்க அவர்கள் போராடி வருகிறார்கள்.சில சமயம் இனவாதிகள் என்ற பார்வையில் தள்ளப்படுகிறார்கள்.

மதமாற்றத்தை பற்றி உங்கள் கருத்து?

முதுகுளத்தூர், மீனாட்சிபுரம், ராமநாதபுரம், சம்பவங்களுக்குப் பிறகு தலித்துகள் மதம் மாறியுள்ளனர்.1995-ல் கொடியங்குளம் சம்பவத்தில் தலித்துகளை மற்ற மதத்துக்கு மாற்றவும் முயற்சிகள் நடந்துள்ளது. .நான் தென் பகுதிகளில் பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் செது, தலித்துகள் மதம் மாற்றப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளேன். நாம் ஏன் மற்ற மதத்தை உயர்வாக எண்ண வேண்டும்? நாம் இந்த மண்ணின் மைந்தர்கள். நமக்கென்று வழிபடும் முறைகளும் பண்பாடுகளும் உள்ளன.

பள்ளர்களும் மனித கழிவு அகற்றும் வேலையை செதுள்ளனர் என்ற குறும்பட இயக்குனர் திவ்யா பாரதியின் கருத்தை நீங்கள் கடுமையாக சாடினீர்களே, அதன் பிறகு உங்கள் கட்சியினர் அவரை குறிவைத்தார்கள்.

அந்த பெண் கூறிய கருத்து தவறு. கழிவு அகற்றும் வேலையை செதவர்களின் அவலத்தை எடுத்துச் சோல்ல அவருக்கு உரிமை உள்ளதே தவிர, அவர்களின் நிறம், சாதி, சமயத்தை குறிப்பிட அவசியம் இல்லை. என்றுமே பள்ளர்கள் நஞ்சைப் புல விவசாயிகள். ஆனால், அவர்கள் பற்றி நிரந்தர அவதூறு பரப்ப வேண்டும் என்பது அவர் உள்நோக்கம். இன்று பள்ளர்கள் தங்கள் உண்மையான அடையாளத்தை மீட்டெடுக்க இடஒதுக்கீடையும் விட்டுத் தரத் தயாராக உள்ளார்கள். பின் எப்படி அவர் சோல்லியதை சகித்துக்கொள்ள முடியும்? இதன்பிறகும் அவர் தன் கருத்தை திரும்ப பெற்றுக்கொள்ளாமல் பிடிவாதமாக உள்ளார்.

ஜல்லிக்கட்டு விஷயத்தில் அனைவரும் ஆதரித்தபோது நான் எதிர்த்தேன்.அதற்காக கிட்டதட்ட  ஒரு லட்சம் கமென்ட்களும் தொலைபேசி அழைப்புக்களும் என்னை திட்டித் தீர்த்தன. நான் அதை சந்தித்துள்ளேன்.

நன்றி: ‘தி ஹிந்து’ (ஆகஸ்ட் 3, 2017)