தமிழக ஹிந்து இயக்க தொண்டர்கள் படுகொலை பாணியில் உத்திரபிரதேச ஹிந்து தலைவர் படுகொலை

உத்திரபிரதேச ஹிந்து சமாஜ் கட்சியின் தலைவர் கம்லேஷ் திவாரியின் கொலைக்கு மூளையாக செயல்பட்ட பெங்களூருவை சேர்ந்த முகமது சாதிக் குப்பலூரை பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். போலீசார் அளித்த தகவலில் திவாரியை கொலை செய்த நான்கு குற்றவாளிகளும் கொலை முடிந்தவுடனே குப்பலூரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். இவர்களிடம் அடிக்கடி பேசி வந்துள்ளதை தொலைபேசி உரையாடலில் கண்டுபிடிக்கப்பட்டது. இதை கண்டுபிடித்த பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் இவனை ரகசியமாக கண்காணித்து வந்து கைது செய்தனர். இவன் தடை செய்யப்பட்ட சிமி(SIMI)-ல் உறுப்பினராக இருந்தது தெரியவந்தது. இவனுடைய கம்ப்யூட்டரை ஆராய்ந்தபோது தேசத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் நிறைய வீடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணை முடித்து இவனை உத்திரப்பிரதேச போலீசாரிடம் ஒப்படைத்தனர்.