தனி மனிதனைப் புகழ்ந்து பாடமாட்டேன்

கடவுளரில் மும்மூர்த்திகள் – சிவன் , விஷ்ணு . பிரம்மா , சங்கீத மும்மூர்த்திகள் தியாகராஜர் , முத்துசாமி தீட்சிதர் , ஷ்யாமா  சாஸ்திரி ,

முத்துசாமி தீட்சிதர் திருவாரூரில் பிறந்தார் . காசியில் வாழ்ந்த சிதம்பரநாத யோகி என்பவரிடம் டேரானார் . ஒருநாள் இருவரும் கங்கையில் குளித்து சென்றனர் . அப்போது ” முத்துசாமி கங்கையில் இறங்கி , கண்களை மூடி சரஸ்வதி தேவியைத் துதித்து ஜபித்துக் கொண்டேயிரு ” என்றார் சிதம்பரநாத யோகி , முத்துசாமி தீட்சிதர் அவ்வாறே செய்தார் . அப்போது சரஸ்வதியின் அருளால் முத்துசாமி தீட்சிதரின் கரங்களில் ராம ‘ என்று எழுதப்பட்ட அழகான வீணை ஒன்று வந்தது . இது சரஸ்வதியின் அருளால் தீட்சிதருக்கும் கிடைத்த பொக்கிஷம் . ஒருமுறை தீட்சிதர் தன் மனைவியுடன் தஞ்சாவூரில் உள்ள ஸ்யாமா சாஷ்திரியின் வீட்டுக்கு வந்திருந்தார் . இருவரின் மனைவியரும் உரையாடிக் கொண்டிருந்தனர் . தஞ்சை சரபோஜி மன்னரை சந்தித்து அவரைப் புகழ்ந்து பாடினால் பொன்னும் , பொருளும் கிடைக்கும் என்று ஸ்யாமா சாஸ்திரியின் மனைவி சொன்னார் , ” எனக்குப் பொன்னும் , பொருளும் தேவை என்றால் நான் மகாலட்சுமியிடம் பிராத்திப்பேனே தவிர தனி மனிதனைப் புகழ்ந்து பாடமாட்டேன் ” என்றார் தீட்சிதர் , அன்று இரவு அவரது கனவில் எழுந்தருளிய மகாலட்சுமி ” உனது  வாழ்வில் வறுமை எனபதே இனி இருக்காது ” என்று கூறி மறைந்தார் .