தட்டுப்பாடு நீருக்கு கட்டுப்பாடு நமக்கு

சுமார் 150 ஆண்டுகளாக தமிழகம் காணாத தண்ணீர் தட்டுப்பாடு. மாநிலத்தின் ஏரிகள் வறண்டு வருகின்றன. பாரதத்தின் 91 பெரிய நீர்பிடிப்புப் பகுதிகளில் 35 சதவீத அளவுதான் தண்ணீர் இருப்பு உள்ளது. செய்திகள் மிரட்டுகின்றன. காலிக்குடங்களுடன் தமிழகத் தாய்மார்கள்  மறியல்களில் இறங்குவதை சானல்கள் அலுக்காமல் வெளிச்சம் போடுகின்றன. ‘போர்வெல் போட்டுடாங்க தண்ணீர் வருது’ என்ற முணுமுணுப்பையும் சில சானல்கள் பதிவு செய்து காட்டுகின்றன.

மொத்தத்தில் குழப்பம். தண்ணீர் தட்டுப்பாடில்லாத நாள் எப்போது வரும்? இருப்பு வேகமாகக் கரைவதை தடுக்க என்னென்ன செய்யலாம்? இதுபோன்ற ஏக்கம் நிறைந்த தவிப்புகள் தலைகாட்டாத குடும்பம் கிடையாது. அரசு செய்யக்கூடியது ஒரு புறம் இருக்க, நுகர்வோரான நாம் என்னென்ன விதத்தில் தண்ணீரை சேமிக்க முடியம்? இதைத்தான் இந்த வாரம் அலசுகிறோம்.