நேர்த்திக்கடனாக நாடகங்கள்

ஊராட்சி ஒன்றியதிற்கு உட்பட்ட வலையங்குளம் கிராமம். இங்கு ஸ்ரீ தானாக முளைத்த லிங்கப் பெருமாள் சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலின் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மஹாசிவராத்திரியன்று தொடங்கும்.

அன்றிலிருந்து தினமும் ஒரு நாடகம்” நடை பெறும். இங்குள்ள மக்கள் எங்களின் குறைகளை போக்க வேண்டி தனி லிங்கப் பெருமாள் சுவாமிக்கு நாடகம் வைக்கிறேன் என்று பிரார்த்தித்துக் கொள்கிறார்கள்.

திருமணம், குழந்தை பாக்கியம், நீதிமன்றம் வழக்குகளிலிருந்து உடல் குணமடைய வேண்டும் போன்ற பல்வேறு காரணங்களுக்காகவும் வேண்டிக்கொண்டு அது நிறைவேறிய பிறகு கிராமப் பொறுப்பாளர்களிடம் முன்பதிவு செய்து நாடகத்தை நடத்திக் கொள்கிறார்கள்.

அறுபத்து நான்கு திருவிளையாடல்கள்” நிகழ்த்தியருளிய பாண்டிய மண்ணில் மஹாபாரத கதைகளிலிருந்து வீர அபிமன்யூ” முதல் நாள் நாடகமாகவும் அடுத்தடுத்து ஸ்ரீ வள்ளி திருமணம், முத்தாலம்மன், சத்தியவான் சாவித்திரி, பக்த பிரகலாதன், பவளக் கொடி, வீரபாண்டிய கட்டபொம்மன், அரிச்சந்திர மயான காண்டம், வேடன் கண்ணப்பன், பட்டாபிஷேகம் போன்ற புராண நாடங்கள் மட்டுமே நடைபெறுகின்றன. சமீபத்தில் ஸ்ரீ வள்ளிதிருமணம் நாடகம் தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற்றது. இந்நாடகங்களில் ஆபாச காட்சிகள், இரட்டை அர்த்தம் வசனம் இடம் பெற்றால் நாடகக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அடுத்து நாடகம் நடத்துவதற்காக கிராமத்தில் நுழையவிடமாட்டார்கள். ஆனால்… இதுவரை அப்படி ஏதும் நடக்கவில்லை.

சித்திரைத் திருவிழாவின் கள்ளழகர் வைகையாற்றில் முதல் இறங்கும் நாள் முதல், எதிர்சேவை வரை தொடர்ச்சியாக 100 நாடகங்கள் நடந்திருக்கின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இக்கிராமத்து குலதெய்வமான ஸ்ரீ முத்தாலம்மன் கோயில் திருவிழாவை  பொறுத்து, நாடக எண்ணிக்கை வேறுபடும். இந்த வருடம் 33 நாடகங்கள் என்று முடிவு செய்துள்ளார்கள். கடந்த பிப்ரவரி 24 முதல் தினமும் ஒரு நாடகம் நடைபெற்று வருகிறது.

பாரத தேசத்தின் ஒவ்வொரு அங்குலமும் ஆன்மீகத்தில் தழைத்தோங்குகிறது என்பதற்கு வலையங்குளம் என்ற கூத்தாடி வலையங்குளம் கிராமம்” ஒரு சான்று.

(தொடர்புக்கு:  9894687796)