டென்மார்க்கில் நமாஸுக்கு தடை

உருது ஊடகம்

டென்மார்க்கில்

நமாஸுக்கு தடை

டென்மார்க்கில் உள்ள பள்ளிக்கூடங்களில் முஸ்லிம் மாணவர்கள் நமாஸ் செய்யக்கூடாது என்று அந்நாட்டின் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் முஸ்லிம் பெண்கள் பர்தா அணியக்கூடாது என்று அரசு ஆணையிட்டுள்ளது.

பள்ளிக்கூடம் நடந்து கொண்டிருக்கும் வேளைகளில் முஸ்லிம் மாணவர்கள் நமாஸ் செய்வதால் மற்ற மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால்தான் பள்ளிக்கூடங்களில் நமாஸ் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கல்வித்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இதற்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மத விவகாரங்களில் அரசு நேரடியாகத் தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கூறியுள்ளனர். (இச்செய்திஅக்பார் மஷ்ரிக்இதழில் வெளியாகியுள்ளது).

 

barthaசுவிட்சர்லாந்தில்

பர்தாவுக்கு சுவிஸில் தடை

ஸ்விட்ஸர்லாந்தில் பர்தா அணிய முஸ்லிம் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை அந்த நாட்டில் நடத்தப்பட்ட பிளபிசைட் எனப்படும் பொது வாக்கெடுப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு லோகர்னோ பகுதியில் பர்தா அணிந்தபடி நோரா இல்லி, ரஷித் நோகாஸ் என்ற இரண்டு முஸ்லிம் பெண்கள் நடமாடினார்கள். அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு 11,000 டாலர் அபாரதம் விதிக்கப்பட்டது. இந்த இருவரும் அல்ஜீரியாவைச் சேர்ந்தவர்கள். ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளில் பர்தாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. (இச்செய்தியைஇன்குலாப்இதழ் வெளியிட்டுள்ளது).

சிங்கப்பூரில்

ஆறு பங்களாதேஷ் பயங்கரவாதிகளுக்கு  5 ஆண்டு சிறை

சிங்கப்பூரில் பயங்கரவாத செயல்பாடுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்தாலும் அது கடும் தண்டனைக்குரிய குற்றம்தான். சமீபத்தில் பங்களாதேஷை சேர்ந்த 6 பேர் பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்கள். இவர்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு உண்டு என்பது புலனாய்வில் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த 6 பேர் குழுவின் தலைவனாக மேசன் ரகுமான் இயங்கியதும் புலனாய்வில் உறுதிப்படுத்தப்பட்டது. மேசன் ரகுமான் அவனது சகாக்கள் ரூபால் மியா, முகமது ஜபார், நூருல் இஸ்லாம், ஷோகைல், இஸ்மாயில் ஆகியோருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. (இந்த செய்தியைஇத்தமத்இதழ் வெளியிட்டுள்ளது).