சிறைக்கு வெளியே சிரிக்கும் பூக்கள்

நீரோஜாலக்ஷ்மி மகாபாத்ரா, ஒடிஸா மாநிலத்தில் வாழும் niroj.  ஒருநாள் சிறைச்சாலைக்கு சென்றுவந்து கொண்டிருந்த சமயம், அங்கு இரு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்தார். விசாரித்ததில் அவர்களது தாயார், பாட்டி இருவரும் அச்சிறையில் உள்ளதால் அவர்கள் தங்க வேறிடம் இல்லை என்பதை அறிந்தார்.

இவர்களைப் போல் பல குற்றமற்ற குழந்தைகள் வாழ்வாதாரம் இன்றி தவிப்பதைக் கண்டு வேதனையடைந்த அவர், ஐ.ஜி வித்யா பூஷன் மகந்தியின் உதவியுடன் அரசாங்கத்தின் உதவி பெற்று, இக்குழந்தைகள் தங்க ‘மதுர் மயீ ஆதர்ஷ சிக்ஷா நிகேதன்’ என்ற விடுதியை ஆரம்பித்தார்.

ஆரம்பத்தில் அவர் கண்ட இரு ஆரம்பித்து, பின் சிறை அதிகாரிகளின் உதவியுடன் 23 குழந்தைகளுக்கு புகலிடம்  அளித்தார். தற்போது இவரிடம் 60 குழந்தைகள் வளர்கிறார்கள். இவரது அரவணைப்பு, வழிகாட்டுதல் மூலம் இக்குழந்தைகள் நன்கு படித்து நல்லதொரு எதிர்காலம் நோக்கி செல்கின்றனர். இக்குழந்தை

களில் பலர் இன்று கல்லூரி மாணவர்கள்.குற்றவாளிகளின்  குழந்தைகள் என சமூகத்தால் ஒதுக்கப்படும் இவர்களுக்கு நல்ல ஆலோசனைகள் வழங்கி, தங்கள் பெற்றோர் சென்ற பாதையில் சென்றிடாமல் தடுக்கிறார். வீடு வீடாகச் சென்று நிதியுதவி கேட்டு இக்குழந்தைகளை எக்குறையும் இன்றி வளர்கிறார் நீரோஜா. மேலும் பல சிறைச்சாலைகளுக்குச் சென்று அங்குள்ள குழந்தைகளையும் தன்னிடம் அனுப்பும்படி வேண்டுகிறார்.

– சுடர்க்கொடி