இனி உள்ளாட்சி அதிபர்களுக்கு மறைமுகத் தேர்தல் தானாம்

ஜனங்களிடமிருந்து பறிமுதலாகிறது ஜனநாயகம்! தமிழகத்தில் தான்!!

ள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையை இழந்து விட்டதாகக் கருதிக் கொண்டு, பாஞ்சாயத்து ராஜ் சட்டத்தையே கேலி கூத்தாக்கும் வகையில் சில சட்டத் திருத்தங்களை  தமிழக அரசு செதுள்ளது.   வரும் உள்ளாட்சி தேர்தல்களில் மாநகராட்சி மேயர் தேர்வு என்பது மக்கள் நேரடியாக வாக்களித்த நிலை மாறி, இனி மாநகராட்சி மன்ற உறுப்பினர்களே தங்களுக்குள் ஒருவரை தேர்வுசெயும் விதமாக சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டு, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.  மீண்டும் 29.8.2016ம் தேதி சட்டமன்றத்தில் ulatchiஅமைச்சர், ஊராட்சி மன்றத் தலைவர் மட்டுமே நேரடியாக தேர்வு செயப்படுவார், நகராட்சி, ஒன்றிய தலைவர்கள் தேர்வு என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மூலமாக தேர்வு நடைபெறும் என சட்டமன்றத்தில் அறிவித்தார்.   குரங்கு கையில் பூ மாலை கிடைத்தால்? தமிழக அரசும் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை தங்களின் வசதிக்கு ஏற்ப சின்னாபின்னமாக்கும் காரியத்தில் ஈடுபடுகிறது.

1992ல் கிராமங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக வந்த அரசியல் சாஸன திருத்தம் 73, தன்னாட்சி பெற்ற உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்க ஒரு கொள்கை வரையறை.  இந்த கொள்கை வரையறையை மாநில அரசுகளும் மக்களும் எப்படிப் பயன்படுத்துகின்றனர் என்பதில்தான் அதிகாரப் பரவல் எந்த அளவுக்கு நடைபெற்றுள்ளது,  அது என்ன விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிந்து கொள்ள இயலும்.

மூன்றடுக்குப் பஞ்சாயத்துக்கள் நாடு முழுவதும் கொண்டு வந்தபோதும், தமிழகத்தில் ஆண்ட, ஆளும் கட்சிகளான தி.மு.கவும் அ.இ.அ.தி.மு.கவும்  தமிழகத்துக்கு தேவையில்லை என்று முடிவெடுத்தார்கள். இதன் காரணமாக  தன்னாட்சி பெற்ற அரசாங்கமாக மாவட்ட அளவில் திட்டமிட்டு, வளர்ச்சிக்காக மக்கள் செயல்பட உருவாக்கப்பட்ட பஞ்சாயத்துக்களை செயல்பட முடியாமல் செது விட்டார்கள்.  குறிப்பாக இதன் பணிகளை முடக்கிவிட்டார்கள்.

1997ல் கொண்டு வந்த தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தில் 37வது திருத்தம் எம்.எல்.ஏ, எம்.பிக்கள்  தாங்கள் சார்ந்த பகுதிகளில் உள்ள உள்ளாட்சிகளில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட வழங்கியது.  இதன் மூலம் ஆளும் கட்சிகள் தங்களின் அதிகாரத்தை காட்ட முடியும்.

தமிழகத்தில் 1994ல் சட்ட திருத்தம் செயப்பட்டது.  இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு அமைப்பு தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டது.  நகராட்சிக்கும் ஊராட்சிக்கும் இடைப்பட்ட ஒரு அமைப்பாக பேரூராட்சி என்ற ஒரு மையம் உருவாக்கப்பட்டது. 2006ல் முதன் முறையாக பேரூராட்சித் தலைவர் முதல் மாநகராட்சி மேயர் வரை தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் மூலம் நிரப்பப்பட்டது.  அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த  ஜெயலலிதா, மறைமுகத் தேர்தலுக்கு கடும் கண்டத்தை தெரிவித்தார்.  பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கு விரோதமாக கருணாநிதி நடந்து கொள்கிறார் என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார்.  2011ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன், பேரூராட்சித் தலைவர் முதல் மாநகராட்சி மேயர் வரையிலான நகர்ப்புற உள்ளாட்சிப் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் நடைபெறும் என சட்டத் திருத்தம் கொண்டுவந்தார்.  முன்பு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்த  ஜெயலலிதா, இன்று மீண்டும் கருணாநிதி கொண்டுவந்த முறைக்கு தள்ளப்பட்டது ஏன்?

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் யாரைத் தலைவராக தேர்வு செயப் போகிறோம் என்பதே தெரியாமல் வாக்களிக்கும் நிலைக்கு வாக்காளர்களை தள்ளுவது, வாக்காளர்களுக்கு செயும் அவமதிப்பு என்பதுடன், ஜனநாயகத்திற்கு வைத்த வேட்டு என்றே கூறலாம்.

ஜனநாயகத்தின் அடிப்படை அமைப்புகளாக கருதப்படும் உள்ளாட்சி அமைப்புகள், அதிகாரத்தைப் பரவலாக்கும் கடமையை நிறைவேற்றுவதற்குப் பதிலாக ஊழலில் ஊறித் திளைக்கின்றன.  மக்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செவதற்கு மத்திய, மாநில அரசுகளின்  பங்களிப்புகளாகக் கிடைக்கும் பெரும் தொகையையும் உள்ளுர் வரிகள் மூலம் கிடைக்கும் நிதியையும் முறையாக பணிகளுக்கு செலவிடுவதற்கு பதிலாக, இந்த மக்கள் பிரதிநிதிகளால் கொள்ளையடிக்கப்படுகிறது.  தொழிற்சாலைக் கழிவுகளால் சிற்றாறுகள், குளங்கள், கிணறுகள் முதலான நீராதாரங்களும் மண் வளமும் பாதிக்கப்படுவதை தடுக்கவும் இவற்றைப் பராமரிக்கவும் பாதுகாக்கவும் வேண்டிய உள்ளாட்சி அமைப்புகளில், லஞ்சப் பணத்தைப் பிரித்துக் கொள்வதில் மட்டுமே போட்டி நடக்கிறது.

ஊழலின் காரணமாக, உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பில் போடப்பட்டுள்ள கிராமப்புறச் சாலைகள், நீர்த் தேக்கத் தொட்டிகள், மக்கள் பயன்படுத்தும் பொதுப் பயன்பாட்டிற்கான கட்டிடங்கள் தரமற்றவையாகவும் அபாயகரமானவையாகவும் இருப்பதற்கு முக்கியக் காரணமே ஊழல்தான்.  இவைகளை தடுக்க வேண்டிய மாநில அரசு, இந்த ஊழல்களைத் தடுக்க முயலாமல், அதிகார பரவலுக்கு எதிராக சட்டத் திருத்தம் கொண்டு வருவது வேடிக்கையானது.

நேரத் தேர்தல் முறையில் தேர்வு செவதற்கு பதிலாக, மறைமுகத் தேர்தலை கொண்டுவர துடிக்கும்  ஆளும் கட்சி,  பண பலத்தின் மூலமாக உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் இந்தத் திருத்தத்தை கொண்டு வந்துள்ளது.