ஞானவாபி மசூதியில் வுசுவுக்கான வசதிகள்

ஈத் உல் பித்ர் பண்டிகையை முன்னிட்டு ஞானவாபி மசூதியில் வுசு (சடங்கு கழுவுதல்) நடத்த போதுமான ஏற்பாடுகளை உறுதி செய்யுமாறு வாரணாசி மாவட்ட ஆட்சியரிடம் உச்ச நீதிமன்றத்தின் லைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் மற்றும் நீதிபதி பிஎஸ் நரசிம்ஹா தலைமையிலான அமர்வு கூறியது. இதையடுத்து உத்தரபிரதேச அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் மேத்தா, மசூதியில் வுஸு நடைபெறும் இடத்தில் மாவட்ட நிர்வாகத்தால் போதுமான தண்ணீர் வழங்கப்படும். 70 மீட்டர் தொலைவில் இதற்காக வசதிகளை நிர்வாகம் செய்துள்ளது. முன்பு பயன்படுத்தப்பட்ட பகுதியில் சிவலிங்கம் கண்டறியப்பட்டு உள்ளதால் அதனை மசூதிக்குள் வழங்க முடியாது என்று கூறினார். அப்போது நீதிபதி, இந்த நோக்கத்திற்காக வசதியான ஒரு ஏற்பாட்டை செய்ய வேண்டும். அவர்களது சடங்குகளுக்கு பெரிய டிரம்கள் வசதியாக இருக்காது. அதற்கு பதில், நீண்ட தொட்டிகள் போன்று வழங்க வேண்டும் என்று கூறினார். அதன்படி, நேற்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தற்காலிக வசதிகள் சிறப்பாக ஏற்பாடு செய்து தரப்பட்டன. அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டியின் இணைச் செயலாளர் எஸ்.எம். யாசின், பக்தர்களுக்கு வுசுவுக்கான தற்காலிக ஏற்பாடுகளை உடனடியாக ஏற்படு செய்துத் தந்த மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தார்.