அல் கொய்தா மிரட்டல்

பாரதத்தில் பயங்கரவாதத்தை உருவாக்கும் மற்றொரு முயற்சியாக, அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான இந்திய துணைக் கண்டத்தில் உள்ள அல் கொய்தா (ஏ.கியு.ஐ.எஸ்) பயங்கரவாத அமைப்பு, பாரதத்தை பழிவாங்குவதாக மிரட்டல் விடுத்துள்ளது. ஏ.கியு.ஐ.எஸ் வெளியிட்டிருந்த ஈத் செய்தியில், பாரதம் மோடி அரசு மற்றும் ஹிந்துக்களுக்கு எதிராக வெறுப்பு மற்றும் பயங்கரவாதத்தை தூண்டுவதற்காக காஷ்மீரில் நடந்த நிகழ்வுகள் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் சமீபத்திய வகுப்புவாத கலவரங்களை மேற்கோள் காட்டி பாரதத்திலும் பிற இடங்களிலும் உள்ள முஸ்லிம்களை விடுவிப்பதாக சபதம் செய்தது. மேலும், சமீபத்தில் சில சமூக விரோதிகளால் கொல்லப்பட்ட மாஃபியா தலைவனும் சமாஜ்வாதி கட்சியின் மூத்தத் தலைவருமான அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் ஆகியோரை குறிப்பிட்டு, முஸ்லிம்கள் தங்கள் தலையில் துப்பாக்கிகளை குறிவைத்து நேரடி தொலைக்காட்சி கேமராக்களுக்கு முன்னால் கொல்லப்பட்டனர் என கூறியுள்ளதுடன் அவர்களை ‘தியாகிகள்’ என்றும் பாராட்டியது. இதைத்தவிர, காஷ்மீரில் உள்ள பாரத ஆக்கிரமிப்பாளர்களால் இஸ்லாமிய சகோதரிகளின் ஹிஜாப்கள் தொடர்ந்து மீறப்படுகின்றன. எண்ணற்ற காஷ்மீரி பெண்கள் தங்கள் மனைவிகள், மகன்கள், சகோதரர்கள் மற்றும் தந்தைகள் வலுக்கட்டாயமாக காணாமல் போதல் மற்றும் படுகொலை செய்யப்படுவதாக தொடர்ந்து புலம்புகிறார்கள், பீகாரில் ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷத்தில் குரான் மற்றும் மசூதிகளின் பிரதிகள் எரிக்கப்பட்டன, ராஜஸ்தானில் உள்ள மசூதி மீது காவி கொடிகள் அசைக்கப்பட்டன என பல போலியான குர்றச்சாடுகளையும் அதில் கூறப்பட்டுள்ளது.