சோனியா காந்திக்கு சதிகாரர்கள் சமூக ஆர்வலர்களாம்!

“அரசின் திட்டங்களுக்கு எதிராக போராடும் பிரபல சமூக ஆர்வலர்கள் உள்பட நுற்றுக்கணக்கானவர்கள் மீது கைது நடவடிக்கை பாய்ந்தது.  குறிப்பாக டெல்லி கலவரத்தில் பங்கேற்றவர்கள் மீது 700 எஃப்.ஐ.ஆர்.-கள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என மத்திய அரசின் மீது குற்றம் சுமத்தி அக்டோபர் 26 அன்று சோனியா காந்தி ஓர் அறிக்கை வெளியிட்டார்.  சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் உலா வரும் நகர்ப்புற நக்சல்களை, நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக மக்களைத் தூண்டுபவர்களைத்தான் கரிசனம் பொங்க சோனியா குறிப்பிடுகிறார். அவர்களில் சிலர்: சுதா பரத்வாஜ், அருண் ஃபெரைரா, வெர்னோம் கோன்சால்வேவ், வரவர ராவ், கௌதம் நவ்லாக், ஆனந்த் தெல்தும்டே, மிலிந்த் எக்போடே, பிரசாந்த் பூஷன், தமிழகத்தில் அ. மார்க்ஸ் போன்றவர்கள்.

கைது செய்யப்பட்ட ’சமூக ஆர்வலர்கள்’ மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவான மக்கள் சிவில் உரிமை கழகத்தில் (பியூசிஎல்) பல பொறுப்புகளை வகித்தவர்கள். சமூக ஆர்வலர்கள் என சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளவர்கள் பற்றி 2017ல் காம்ரேட் பிரகாஷுக்கு நக்சல்கள் எழுதிய கடிதம் ஒன்றை ANI என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.  We are thinking along the lines of another Rajiv Gandhi type incident என குறிப்பிட்டுள்ளதை கண்டுகொள்ளாத காங்கிரஸ் கட்சியின் தலைவி கொலைகார கும்பலை சமூக ஆர்வலர்கள் என்கிறார்! கைது செய்யப்பட்ட சுதா பர்தவராஜ் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சார்ந்தவர், ஒரு வழக்கறிஞர்.  2007- – 2008-ல் மாவோயிஸ்ட்களின் தொடர் வன்முறையின் காரணமாக தேசிய மினரல் டெவலப்மென்ட் கார்பரேஷன் நிறுவனத்திற்கு ரூ. 200 கோடி இழப்பு ஏற்பட்டது.    2008-ல் நாராயணபூரில் 132 மின்சார டிரான்ஸ்பார்மர்கள் அடித்து நொறுக்கப்பட்டன, இதனால் மாவட்டத்தில் 12 நாட்கள் மின்சாரமின்றி பொது மக்கள் தவித்தார்கள்.  இப்படிப்பட்டவர்களை சமூக ஆர்வலர்கள் என சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

சோனியா குறிப்பிட்டுள்ள மற்றொரு விஷயம், டெல்லி கலவரத்தில் பங்கேற்றவர்கள் மீது  700 எஃப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது. டெல்லி கலவரம் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு எதிராக நடத்தப்பட்டது. வன்முறையில் ஒரு காவல் துறை அதிகாரி கொல்லப்பட்டார், பலர் படுகாயமடைந்தார்கள். இந்திய அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்ற கருத்தை வலியுறுத்தி கலவரங்களை தூண்டினார்கள். இதற்காக டெல்லி பல்கலைக்கழக பேரராசிரியர் அபூர்வானந்த், ஜாமியா கூட்டுக் குழுவினருடன் 20 கூட்டங்களை நடத்தினார். குல்பிஷ்சா, ’நான் பர்தா அணிந்து கொண்டு டெல்லியில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் தெருத் தெருவாக பெண்கள், குழந்தைகள் வசம் கருத்தை வலியுறுத்தி போராட்டத்தை தூண்டவும்  அவர்களை பங்கு கொள்ளவும்  முனைப்பாக செயல்பட்டேன்’ என தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு கலவரத்தை தூண்டியவர்கள் மீது எஃப்.ஐ.ஆர். பதிவிட்டால், சோனியா காந்தி முதலைக் கண்ணீர் வடிக்கிறார். என்னத்தைச் சொல்ல!