தமிழக அரசுக்கு கிடுக்குப்பிடி

ண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டதில் இருந்து சர்ச்சைகள் தொடர்கதையாகி விட்டன. அரசியல்வாதிகளுக்கு பணம் காய்ச்சி மரமாக இருந்தது அண்ணா பல்கலைக்கழகம். சூரப்பா வந்த பிறகு நிர்வாகம் நேர்மையாக நடைபெறுகிறது. ஊழல்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. எனவே திராவிட பெருச்சாளிகளால் முன்பு போல சம்பாதிக்க முடியவில்லை. இதுதான் சூரப்பா மீதான பொய் புகார்களுக்கும், மொட்டை கடுதாசிகளுக்கும் காரணம். சூரப்பாவை விசாரிக்கும் அதிகாரம் கவர்னருக்கு மட்டுமே உள்ளது. இதை தெரிந்திருந்தும் பழிவாங்கும் எண்ணத்தில் அவர் மீது அவசர கதியில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இது குறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், இது போல முதல்வரின் தனிப்பிரிவிற்கு வந்த அனைத்து புகார்கள் மீதும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதா. இதே போல புகாருக்கு உள்ளான எத்தனை துணை வேந்தர்கள் மீது என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அரசு இந்த விவகாரத்தில் அவசரமாக முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. விசாரணையில் இந்த புகாரில் உண்மை இல்லை என்றால் என்ன செய்வது. துவக்கக் கட்ட விசாரணை நடத்தாமல் நேரடியாக விசாரணை கமிஷன் அமைத்தது ஏன். இது போன்ற புகாருக்கு உள்ளான மற்ற துணை வேந்தர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட நேரிடும். சூரப்பா மீதான விசாரணை கமிஷன் மீது ஏன் தடை விதிக்கக் கூடாது என அடுக்கடுக்காக கேள்விகள் எழுப்பினர்.

நீதிமன்றம் விசாரித்து தண்டனை தருவது ஒருபுறம் இருக்கட்டும். தேர்தல் சில மாதங்களில் வர உள்ள நிலையில், நாம் என்ன செய்யப்போகிறோம்?

One thought on “தமிழக அரசுக்கு கிடுக்குப்பிடி

Comments are closed.