சுரங்கம் வெட்டி தீவிரவாதிகளை அனுப்பி வைக்கிறதா பாகிஸ்தான்?

பாகிஸ்தான் பகுதியில் இருந்து தொடங்கி, இந்திய பகுதிவரை சுரங்கம் காணப்பட்டது. அதன் வழியாக, பயங்கரவாதிகள் வந்திருக்கலாம் என்று கருதப்பட்டது. அது 170 மீட்டர் தூரத்துக்கு சுரங்கம் தோண்டப்பட்டு அது பாகிஸ்தானில் இருந்து காஷ்மீர் வரை உள்ளது. அதன் ஆழம் 20 முதல் 25 அடிவரை இருந்தது.

கடந்த ஜனவரி மாதம் நக்ரோடா என்ற இடத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் பலியானார்கள். அதுதொடர்பாக நடந்த விசாரணையில், ஒரு சுரங்கம் வழியாக பயங்கரவாதிகள் வந்ததாக தெரிய வந்தது.

அது எங்கே இருக்கிறது என்று தேடி வந்தபோது, இந்த சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சுரங்கத்தை பயன்படுத்தி, பயங்கரவாதிகளை காஷ்மீருக்குள் பாகிஸ்தான் அனுப்பி வந்துள்ளது. பயங்கரவாதிகளை அனுப்பி வைக்க சுரங்கம் தோண்டுவது, பாகிஸ்தான் சதித்திட்டத்தின் ஒரு அங்கம். அதனால் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.