சாலை பாதுகாப்பு மாதம் சாத்தியமா?

தமிழகத்தில் நேற்று முதல் பிப்ரவரி 17 வரை, சாலை பாதுகாப்பு மாதம் கொண்டாடப்படும். போக்குவரத்து விதிகளை மீறினால் உடனடி தண்டனை என தமிழக அரசும் காவல்துறையும் தெரிவித்துள்ளது. இது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், பருவ மழையில் சேதமான பல சாலைகள் சரி செய்யப்படவில்லை. நல்ல நிலையில் உள்ள நகரின் பல முக்கிய சாலைகள்கூட ஆங்காங்கு தோண்டப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள், குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். விபத்தும் ஏற்படுகிறது. பாதுகாப்பற்ற சாலைகளை சரி செய்யாமல் சாலை பாதுகாப்பு மாதம் சாத்தியமா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அதே சமயம், சென்னையில் காவல்துறைக்கு புகாரளித்தால் ஆறு நிமிடத்திற்குள் காவலர்கள் ரோந்து வாகனத்தில் சம்பவ இடத்திற்கு செல்ல வேண்டும் என காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார் என்பது நல்ல செய்தி.