சந்தடியில்லாமல் 5,000 குழந்தைகளுக்கு ஹிந்து பண்புப் பயிற்சி!

25 ஆண்டுகளில் சந்தடியில்லாமல் 5,000 குழந்தைகளுக்கு ஹிந்து பண்புப் பயிற்சி!

வடசென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில், மே மாத விடுமுறையில், பத்து நாள் பண்புப் பயிற்சி வகுப்பு நடக்கிறது.

இந்தச் செய்தி சாதாரணச் செய்தி அல்ல. வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை வட்டாரத்தில் தான், சமுதாயத்தின் எளிய பிரிவினரான தினசரி கூலி பெறும் தொழிலாளர்கள், வசிக்கிறார்கள். அந்தப் பகுதியில் பகவத் கீதை வகுப்போ, புராணச் சொற்பொழிவுகளோ, ராமாயண, மகாபாரத விரிவுரைகளோ இல்லை என்றே சொல்லலாம். அதற்கெல்லாம் அங்குள்ளவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. அப்படிப்பட்டவர்களின் ஹிந்து கலாசாரம், ஹிந்து மதம் பற்றியெல்லாம் யார் சொல்லிக் கொடுப்பார்கள்?

‘நாங்கள் இருக்கிறோம்’ என்று முன்வந்தார்கள், மளிகைக் கடை நடத்தும் மலைக்கனி அண்ணாச்சி, பேப்பர் கடை hindu-banbu-payirchiவைத்திருக்கும் சண்முகவேல், துணிக் கடைக்காரரான நாகராஜன், ரயில்வே ஊழியர் ராஜகுரு, பத்திரிகை அச்சகத் தொழிலாளர் பழனிவேல் உள்ளிட்டோரும் ராஜம்மா நரசிம்மலு, அம்சவல்லி, ஞானம் அக்கா, சாவித்திரி உள்ளிட்ட குடும்பத் தலைவிகளும். இவர்கள் எல்லோரும், தாயுமானவர் அறக்கட்டளை மூலம் ஆங்காங்கு உள்ள சிறுகோயில்களில் தாயுமானவர் பாடல்கள், காயத்ரி மந்திரம், பஜனை என்று  சமய ஞானம் புகட்டி வந்தார்கள்.

அப்பகுதியில் செயல்பட்டு வந்த ஆடலரசன், அண்ணாமலை உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ், ஹிந்து முன்னணி   தொண்டர்களும்  ராஷ்ட்ர சேவிகா சமிதி சேவிகைகளும் இந்தப் பணியில் தோள் கொடுத்தார்கள்.  ‘இறைபணி அன்பர்கள்’ என்ற அமைப்பு உதயமாயிற்று. மே மாத விடுமுறையில், பண்புப் பயிற்சி வகுப்பு நடைபெறத் தொடங்கியது.

தொடங்கி, இடைவிடாமல் 25 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் சராசரியாக அப்பகுதியிலுள்ள ஏழைத் தொழிலாளர்களின் 200 குழந்தைகள், பண்புப் பயிற்சி பெறுகிறார்கள் என்பதால் இதுவரை சந்தடியில்லாமல் 5,000 மிகவும் சிரத்தையுடன் ஹிந்துப் பண்பாட்டை இறைபணி அன்பர்கள் புகட்டிவர முடிகிறது.

இப்படிப்பட்ட பகுதியில், இவ்வாறு வளரும் தலைமுறைக்கு ஆன்மிக, தேசபக்தி பயிற்சி தரும் பணியை, சாதாரணக் குடும்பங்களைச் இணைந்து, தொடர்ந்து, நடத்தி வருவது போற்றுதலுக்கு உரியது, என்கிறார் தென் தமிழக ஆர்.எஸ்.எஸ் செயலர் ஆடலரசன்.

இந்த ஆண்டு முகாம் பொறுப்பாளராக செயல்பட்ட மோகனா, துணை பொறுப்பாளரான தங்கம் ஆகிய இருவரும் குடும்பத் தலைவிகள். பண்புப் பயிற்சி வகுப்பு நடக்கும் பத்து நாளும் இவர்கள் இறைபணிக்கென முழுநேர ஊழியர்கள் ஆகிவிடுகிறார்கள்.

இறைபணி அன்பர்களின் சிரத்தை காரணமாக, பண்புப் பயிற்சி தரும் அடுத்த தலைமுறை சகஜமாக உருவாகியுள்ளது. இந்த ஆண்டு, குழந்தைகளுக்கு ஸ்லோகம் கற்பித்த நர்மதாவும் கதை சொன்ன அழகுராணியும் 7வது, 8வது படிக்கும்போது இறைபணி அன்பர்கள் புண்ணியத்தில் பண்புப் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. (நர்மதா அரசு பள்ளி ஆசிரியை; அழகுராணி அக்குபிரஷர் நிபுணர்).hindu-banbu-payirchi2

பண்புப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட குழந்தைகள் பெரியவர்களாகி, சிங்கப்பூர், அமெரிக்கா என்று உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தாங்கள் பிறந்து வளர்ந்த பகுதியில் தங்களுக்குக் கிடைத்த ஹிந்து பண்புப் பயிற்சி வாய்ப்பு எல்லா கிடைக்க வேண்டும் என்பதற்காக, தாயகம் வரும்போதெல்லாம் இறைபணி அன்பர்கள் அமைப்பின் பொறுப்பாளர்களைச் சந்தித்து, பயிற்சி வகுப்பு தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தத் தவறுவதில்லை. அக்கம்பக்கத்தில் உணவகம் நடத்திவரும் அன்பர்கள் குழந்தைகளுக்கு மதிய உணவு அன்பளிப்பாக வழங்கி வருவதிலும் வியப்பில்லை. இந்த சகஜமான, அவசியமான நற்பணியின் வெள்ளிவிழா கொண்டாடக் கூட இறைபணி அன்பர்கள் பெரிதாக யோசிக்கவில்லை. காரணம் பணி, சகஜமான பணி.