அனைத்தையும் அரவணைக்கும் ஹிந்து ஞானம்; மகான்களின் வாழ்வில்

adhi-sankarஎன்பவர் மிகப் பெரிய அறிஞர். சமய ஞானத்திலும், சாஸ்திரங்களிலும், பெரும் புலமை வாய்ந்தவர். ஹிந்து மதச் சடங்குகளில் அதிருப்தி அடைந்து, பௌத்த மதத்திற்கு மாறினார். பௌத்தத்தின் தத்துவங்களை ஆழ்ந்து படித்தார். பௌத்தம் சம்பந்தமாக ஏராளமான நூல்களையும் எழுதினார். ஆனாலும் கூட, அவருக்கு ஏனோ மனதில் திருப்தி ஏற்படவில்லை. ஹிந்து மதத்தைவிட, பௌத்தம் ஒன்றும் உயர்ந்தது இல்லை என்று முடிவுக்கு வந்தார். எனவே, தாம் எழுதிய பௌத்த சமய நூல்களை நெருப்பில் போட்டுக் கொளுத்திவிடுவது என்று முடிவு செய்தார்.

இதைக் கேள்விபட்ட ஆதிசங்கரர் ஓடோடி வந்தார். அதைத் தடுக்க முயற்சி செய்தார். அதற்குள் அமரசிம்மன் பல நூல்களை தீயில் போட்டுவிட்டார். கடைசியாகத் தன் கையில் இருந்த ஓலைச்சுவடியை நெருப்பில் வீசச் சென்றபோது, சங்கரர் அதைத் தடுத்து அவரிடமிருந்து பறித்துக்கொண்டார். அதுதான் இன்று ‘அமரகோசம்’ என்று புகழ் பெற்றுள்ள சம்ஸ்கிருத நிகண்டு*.

‘அமரசிம்மன் பௌத்தனாயிற்றே… அவர் எழுதிய நூல்கள் அழிந்தால் நல்லதுதானே’ என்று சங்கரர் கருதவில்லை. அறிவின் கோணங்கள் எவ்விதமான படைப்புகளை வெளிப்படுத்தினாலும், அந்த அறிவு நூல் காக்கப்பட வேண்டியது என்று நினைத்தார் ஆதிசங்கரர்.

எல்லாக் கருத்துக்களுக்கும் மதிப்பு அளித்தவன், அளிப்பவன் ஹிந்து மட்டுமே…

* நிகண்டு என்பது ஒரு சொல்லின் பல பெயர்களைப் பட்டியலிடும் நூல்.

எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில்

அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்