சத்தமில்லாதமல் ஒரு சாதனை

கொரோனா பொதுமுடக்க காலத்தில் உலகமே ஸ்தம்பித் திருந்த காலத்தில், பாரதமும் பாதிக்கப்பட்டது. ஆனால் இது நமக்கு சில புதிய தொழில் வாய்ப்புகளை திறந்து விட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் நாம் சர்வதேச தரத்தில், 6 கோடி பி.பி.இ பாதுகாப்பு உடைகள், 15 கோடி என் — 95 முகக்கவசங்கள் தயாரித்துள்ளோம். இதனால் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. தொழில் துறையினர் மானியம் கேட்காத போதும் தொழில் வளர்ச்சிக்காக மானியம் வழங்கப்பட்டது என ஐ.எப்.சி அமைப்பின் கருத்தரங்கில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.