சகோதரி நிவேதிதை வாழ்வில் சில முக்கிய நிகழ்வுகள்

மார்கரெட் எலிசபத் நோபிள் 1895-ல் சுவாமி விவேகானந்தரை இங்கிலாந்தில் சந்தித்தார். 1898-ல் சுவாமி விவேகானந்தரிடம் தீட்சை பெற்று ‘நிவேதிதை’ என பெயர் பெற்றார்.

ஆன்மீக வாழ்வைவிட மக்களுக்கு அப்போதைய தேவை சேவை தான் என்பதை உணர்ந்து பெண்களுக்கான பள்ளி ஒன்றை திறந்தார்.

அன்னை சாரதாதேவியிடம் பேச வங்காள மொழி கற்றார். ஆதரவற்ற பெண்களுக்காக கைவினை பொருள், தையல் போன்ற தயாரிப்புகளை பயிற்றுவித்தார்.

பள்ளியை விரிவாக்க, நிதி திரட்டுவதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து பயணம் மேற்கொண்டார். அமெரிக்காவில் ராமகிருஷ்ண தொண்டர் சங்கத்தை ஏற்படுத்தினார்.

கொல்கத்தா மக்களை பிளேக் நோய் தாக்கிய பொழுது, மக்களுக்கு பணிவிடை செய்தார். சுவாமி விவேகானந்தர் மறைவால் சோக முற்றாலும் அவரது பணியை விடாமல் மேற்கொண்டார்.

அரவிந்தருடன் இணைந்து தேச விடுதலைக்கும் பாடுபட்டார். தேசம் விடுதலை பெறாத காலத்திலேயே ‘வந்தேமாதரம்’ பாடலை தங்கள் பள்ளியில் காலை பாடலாக பாட வைத்தார்.

தேசத்தின் கொடியை அப்போதே வடிவமைத்தார். பாரத கலைகள் உலகில் மிகவும் மேன்மையானவை என்பதை உலகிற்கு உணர்த்த பாடுபட்டார்.

சென்னை உட்பட பாரதமெங்கும் பயணித்து, தேச ஒற்றுமை, விடுதலையை வலியுறுத்தி பல கருத்தரங்கங்களில் பங்கேற்று பேசினார்.

பாரதியாருக்கு ஆன்மீக குருவாக திகழ்ந்தார். ஜகதீஷ் சந்திரபோஸின் தாவரங்களின் உணர்ச்சி குறித்த ஆராய்ச்சி நூலை வெளியிட உதவினார்.

தன் சொத்துக்களை பாரத பெண்களின் கல்வி வளர்ச்சிக்கு எழுதி வைத்தார். டார்ஜிலிங்கில் உடல்நிலை சரியில்லாமல் அக்டோபர் 13-ல் தன் 44-வது வயதில் மறைந்தார்.

சகோதரி நிவேதிதை நினைவு தினம் இன்று.