முன்னோரும் பாரதம்

அடுத்த முப்பது ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக பாரதம் உயரும். அதன் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலராக உயரும் என லான்செட் பத்திரிகை அதன் ஆய்வில் கணித்துள்ளது.

சுவாமி விவேகானந்தர் ஒரு முறை இன்னும் 50 ஆண்டுகளுக்கு பாரதத்தாய் தான் நாம் வழிபடும் தெய்வம் என கூறினார். அதிலிருந்து சரியாக 50 வருடங்களில் பாரதம் சுதந்திரம் பெற்றது. இதே போல அவர் மற்றொரு முறை ‘பாரதம் உலகின் குருவாக திகழும்’ என கூறியுள்ளார். அறிஞர் நாஸ்டர்டாமஸ் வருங்காலத்தில் (3797வரை) உலகில் என்னென்ன நடக்கும் என்பதை  கூறியுள்ளார்.

உலகப்போர், இரட்டை கோபுர தாக்குதல், இந்திரா ராஜீவ் கொலை, என அவர் கூறிய பல விஷயங்கள் இன்றுவரை அப்படியே நடந்து வருகிறது.

விவேகானந்தர், நாஸ்டர்டாமஸ் கூற்றுப்படி, பாரதம் உலகின் தலைசிறந்த நாடாக திகழும் என்பது நிச்சயிக்கபட்ட ஒன்று.

இதை அடிப்படையாக கொண்டு, லான்செட் கணிப்புகளை ஆராயும்பொழுது அந்த கணிப்புகள் உண்மையாகவே தெரிகின்றன.

ஆனால் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக பாரதம் திகழுமா என்பது சந்தேகமே.

ஏனெனில் உலகின் முதல் பொருளாதார நாடாக பாரதம் திகழவே வாய்ப்புகள் அதிகம். நாம் அனைவரும் தேசபக்தியுடன் இணைந்து உழைத்தால் இந்த கணிப்புகள் எளிதில் உண்மையாகும்.

உலகின் குருவாக மட்டும் அல்ல, பொருளாதார சக்தியாகவும், வல்லரசாகவும் பாரதம் உருவெடுக்கும்.
அமெரிக்காவில் வேலை கிடைக்க வேண்டும் என்பது இன்றைய இளைஞர்களின் கனவு. பாரதத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்பது எதிர்கால இளைஞர்களின் கனவாக இருக்க முயற்சிப்போம்.