எல்லையில் புதிதாக 44 பாலங்கள். இதன் மூலம் ராணுவம் பல மடங்கு வலுபெறும்

லடாக், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் எல்லைச் சாலை அமைப்பு சார்பில் கட்டப்பட்டுள்ள 44 பாலங்களை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

latest tamil news

இதில், லடாக் எல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 7 பாலங்கள் மூலம் எல்லையில் ராணுவ வீரர்களுக்குத் தேவையான பொருட்களை, தளவாடங்களை விரைவாகக் கொண்டு செல்ல இயலும்.

இமாச்சலப் பிரதேசத்தில் தார்ச்சாவிலிருந்து லடாக்கை இணைக்கும் பாதை அமைக்கும் பணியும் தற்போது நடந்து வருகிறது. 290 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்படும் சாலை முழுமையாக முடிந்துவிட்டால், லடாக் பகுதியிலிருந்து கார்கில் பகுதிக்கு எளிதாகச் செல்ல முடியும். காணொலி மூலம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத் தலைமை அதிகாரி பிபின் ராவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.